ரசிகர்கள் கண்ணியம் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் – நடிகர் அஜித் வேண்டுகோள்

நடிகர் அஜித் குமார், ”ரசிகர்கள் பொதுவெளியிலும் சமூக வலைத்தளத்திலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Actor Ajith kumar, actor ajith statement, ajith Fans must follow dignity discipline, அஜித், தல அஜித், அஜித் குமார், வலிமை, வலிமை அப்டேட், ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள், கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும், valimai update, ajith request to fans, ajith sad, ajith statement, ajith statement to fans, அஜித் ரசிகர்கள்

”என் ரசிகர்கள் என்ற பெயரில் வலிமை அப்டேட் கேட்டு பல்வேறு இடங்களில் செய்துவரும் செயல் வருத்தமுறச் செய்வதாக” கூறியுள்ள நடிகர் அஜித் குமார், ”ரசிகர்கள் பொதுவெளியிலும் சமூக வலைத்தளத்திலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இது நடிகர் அஜித் குமாருடைய 60வது படம் ஆகும்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக படம் உருவாக்குவதில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

நடிகர் அஜித் குமார் இந்த படத்தில் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

அஜித் குமார் நடிக்கும் வலிமை படத்தைப் பற்றி டைட்டிலைத் தவிர ரசிகர்களுக்கு ஒரு ஆண்டுக்கும் மேல் எந்த அறிவிப்பு தெரிவிக்கப்படவில்லை. இதனால், அஜித்தின் தீவிர ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் பற்றி சமூக வலைத்தளங்களில் கேட்டுக்கொண்டிருந்தனர். படக்குழுவினர் வலிமை படத்தைப் பற்றி உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தாலும், ரசிகர்கள் விடுவதாக இல்லை. சிலர் சமூக வலைத்தளங்களில் வலிமை அப்டேட் எப்போது வரும் என்று முதல்வர் பழனிசாமியிடம் வரை கேட்டுவிட்டனர்.

இந்த நிலையில், நடிகர் அஜித் குமார், ரசிகர்கள் என்ற பெயரில் வலிமை அப்டேட் கேட்டு பல்வேறு இடங்களில் செய்துவரும் செயல் தன்னை வருத்தமுறச் செய்வதாக தெரிவித்துள்ளார். மேலும், ரசிகர்கள் பொதுவெளியிலும் சமூக வலைத்தளத்திலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு நடிகர் அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து நடிகர் அஜித் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “என் மீதும் என் படங்களின் மீதும் அபரிமிதமான அன்புக் க்ண்டு இருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்.

கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் ‘வலிமை’ சம்பந்தப்பட்ட அப்டேட் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில்,. நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும்.

இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும் சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், “பிப்ரவரி 15-ம் தேதி ‘வலிமை’ படத்தின் ஷூட்டிங் முடிவடையும் என சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், முதல்முறையாக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அறிவித்துள்ளார்.

இது குறித்து போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வலிமை படத்துக்காக நீங்கள் காண்பித்து வரும் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி. வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விரைவில் வெளியிட உள்ளதால் சற்று பொறுமையாக இருக்கவும்” என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actor ajith kumar statement fans must follow dignity discipline

Next Story
வாணி ராணி சீரியல் நடிகை வீட்டுல விசேஷம்: இன்ஸ்டாவில் மகிழ்ச்சி அறிவிப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com