அஜித்- ஷாலினி ரொமான்ஸ் போட்டோ பகிர்ந்த ஷாமிலி: கொழுந்தியா குசும்பு இது தானோ?!

Actor Ajith and Shalini's latest romantic photo shared by actress shamlee goes viral in social media Tamil News: நடிகர் அஜித் - ஷாலினி தம்பதியின் சமீபத்திய புகைப்படத்தை பகிர்ந்துள்ள நடிகை ஷாம்லி "23 வருட பந்தம்" என்று கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.

Actor Ajith and Shalini's latest romantic photo shared by actress shamlee goes viral in social media Tamil News: நடிகர் அஜித் - ஷாலினி தம்பதியின் சமீபத்திய புகைப்படத்தை பகிர்ந்துள்ள நடிகை ஷாம்லி "23 வருட பந்தம்" என்று கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actor Ajith Kumar Tamil News: Ajith and Shalini's latest romantic photo goes viral

ajith kumar - shalini Tamil News: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். தமிழில் 'என் வீடு என் கணவர்' என்கிற படத்தின் மூலம் அறிமுகமான இவர், காதல் கோட்டை (1996), அவள் வருவாளா (1998) மற்றும் காதல் மன்னன் (1998) ஆகிய படங்களின் மூலம் ரொமான்டிக் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். 1999ம் ஆண்டில் வெளிவந்த அமர்க்களம் (1999) படத்தில் சண்டைக் காட்சிகளில் நடித்து தன்னை ஒரு ஆக்சன் ஹீரோவாகவும் அறிமுகம் செய்திருந்தார்.

Advertisment
publive-image

தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து, சினிமாவில் ஏற்ற இறக்கங்களை கண்ட நடிகர் அஜித் கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி நடிகை ஷாலினியை திருமணம் செய்து கொண்டார். முன்னதாக அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்த இந்த தம்பதியில் நடிகர் அஜித் ஷாலினியை தான் மணக்க விரும்புவதாக 1999ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தெரிவித்தார். இதனையடுத்து இவர்களது திருமணம் விழா 200ம் ஆண்டில் நடைபெற்றது.

publive-image
Advertisment
Advertisements

இந்த தம்பதிக்கு 2008 ஆம் ஆண்டு ஜனவரி 3 அன்று அனோஷ்கா என்கிற மகள் பிறந்தார். 2015 மார்ச் 2 அன்று, அவர்களுக்கு இரண்டாவது குழந்தையாக ஆத்விக் பிறந்தார். நடிகை ஷாலினி உடனான திருமணத்தின் மூலம், அவர் நடிகை ஷாமிலிக்கு மைத்துனரானார்.

publive-image

இந்நிலையில், நடிகை ஷாம்லி தனது சகோதரி ஷாலினி மற்றும் மைத்துனர் அஜித்தின் மிக அன்பான காதல் அரவணைப்பில் இருக்கும் சமீபத்திய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் "23 வருட பந்தம்"- "23 years of togetherness" என்று கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவைப் பார்த்த ரசிகர்கள் நடிகர் அஜித் - ஷாலினி தம்பதி திருமணம் செய்து கொண்டு 22 வருடங்கள் மட்டுமே ஆகியுள்ளன. இப்படி இருக்கையில் அவர் ஏன் கூடுதலாக ஒரு வருடம் சேர்த்துள்ளார் என்று குழப்பத்தில் உள்ளனர்.

ஆனால் நடிகை ஷாம்லி, நடிகர் அஜித் - ஷாலினி திருமணத்திற்கு முந்தைய ஓராண்டு நெருக்கத்தையும் சேர்த்து கணக்கிட்டது போல் தெரிகிறது. அந்த தேதிகளை பார்க்கும் போதுதான் தற்போது தெரிய வருகிறது. அதைத்தான் நடிகை ஷாம்லியும் அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

நடிகர் அஜித் தற்போதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நிலையில், அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வலிமை' திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் பிளாக்பஸ்டர் ஹிட்டாக மாறியது. அவர் விரைவில் மீண்டும் எச்.வினோத் இயக்கும் 'ஏகே61' படப்பிடிப்பைத் தொடங்க இருக்கிறார். மேலும் இந்தாண்டின் இறுதியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'ஏகே 62' படத்திலும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Entertainment News Tamil Shalini Ajith Viral Photo Viral Actor Ajith Thala Ajith Ajith

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: