scorecardresearch

ஸ்டைலிஷ் லுக்கில் அஜித்… வைரலாகும் ஃபேமிலி போட்டோஸ்!

Actor Ajith Kumar’s Latest pictures with his family Tamil News: தனது அடுத்தப் படத்திற்காக தன்னை புதிய லுக்கில் மாற்றியுள்ள நடிகர் அஜித், குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

Actor Ajith Kumar Tamil News: Latest pictures of ajith and his family goes viral

Actor Ajith Kumar Tamil News: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் திரைப்படம் வெளியாகிறது என்று சொன்னாலே போதும் தியேட்டர்கள் திருவிழாக் கோலம் பூண்டுவிடும். இதை சமீபத்தில் வெளியாகிய வலிமை படத்தின் போது நீங்கள் பார்த்திருக்க கூடும்.

அந்த அளவிற்கு கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட சினிமா நட்சத்திரமாக நடிகர் அஜித் வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வாரத்தில் வெளியாகிய வலிமை திரைப்படம் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில், அவரின் படம் முன்னர் செய்த வசூல் சாதனைகளை இப்படம் முறியடித்து வருகிறது.

இதற்கிடையில், நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் – இயக்குநர் எச்.வினோத் – தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக புதிய படம் மூலம் மீண்டும் இணையவுள்ளார்கள். இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், படப்பிடிப்பு 9ம் தேதி முதல் ஐதராபாத்தில் தொடங்க உள்ளதாகவும் ஏற்கனேவே தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்வை குறித்து இப்படத்தின் கதை இருப்பதால் அண்ணா சாலையை போன்றே ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை தபு நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் தனது 61வது படத்திற்கான படப்பிடிப்பில் களமிறங்க உள்ள நிலையில், அப்படத்திற்காக தன்னை புதிய லுக்கில் மாற்றி இருக்கிறார். நேற்று அவரது மகன் ஆத்விக் குமாரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட அஜித் குடும்பத்தினருடனும், மனைவி ஷாலினி அஜித் உடனும் சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். தற்போது வெளியாகி இருக்கும் அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்தின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்

மனைவி ஷாலினியுடன் நடிகர் அஜித்

குடும்பத்தினருடன் நடிகர் அஜித்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actor ajith kumar tamil news latest pictures of ajith and his family goes viral