Advertisment

அஜித் இப்போ 'வேற மாரி'… கேட்ட தொகையை விட கூடுதலாக கொட்டிக் கொடுத்த தயாரிப்பாளர்!

Actor Ajith’s 'AK62' movie shoot starts end of this year; Lyca Productions paid 105 crores as a salary Tamil News: இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘ஏகே 62’ படத்தில் நடிகர் அஜித் நடிக்க 105 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Actor Ajith Kumar Tamil News: Lyca Productions paid 105 crores to Ajith for 'AK62'.

Actor Ajith Kumar Tamil News: தமிழில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வலிமை’ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களுக்கு மத்தியில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. மேலும், ரசிகர்கள் மத்தியிலும் மிகச்சிறப்பான வரவேற்பு இருந்தது.

Advertisment

இந்நிலையில், வலிமை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித்-போனி கபூர்- எச்.வினோத் கூட்டணி தற்போது ‘ஏகே61’ படத்திற்கான தயாரிப்பு பணிகளை தொடங்கியுள்ளனர். இப்படத்தில் நடிகர் அஜித் ஸ்டைலிஷ் லுக்கில் தோன்ற இருக்கிறார். அவரின் சமீபத்திய புகைடபங்கள் இணைய பக்கங்களில் வைரலாகின. ‘ஏகே61’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது.

publive-image

இதற்கிடையில், நடிகர் அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘ஏகே 62’ படத்திலும் நடிக்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தாண்டின் இறுதியில் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்திற்கு 'ராக்ஸ்டார்' அனிருத் இசையமைக்கிறார். நடிகர் அஜித்துடன் நயன்தாரா மற்றும் வைகைப்புயல் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

publive-image

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் 'ஏகே62' படத்திற்காக நடிகர் அஜித்துக்கு நூற்று ஐந்து கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜித் 100 கோடி மட்டுமே கேட்டதாகவும், பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக வலம் வரும் அவர் இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு தயாரிப்பு நிறுவனத் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா மிகவும் மகிழ்ச்சியடைந்து மேலும் 5 கோடி கொடுத்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Entertainment News Tamil Ajith Thala Ajith H Vinoth Actor Ajith Tamil Cinema News Boney Kapoor
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment