Advertisment
Presenting Partner
Desktop GIF

வருங்கால பைக் சாம்பியன் குட்டி ‘தல’; டிரெண்டாக்கும் அஜித் ரசிகர்கள்

Actor Ajith latest photo with his son aadvik goes viral: வருங்கால பைக் சாம்பியன் குட்டி தல; அஜித் மகனின் புகைப்படத்தை டிரெண்டாக்கும் ரசிகர்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வருங்கால பைக் சாம்பியன் குட்டி ‘தல’; டிரெண்டாக்கும் அஜித் ரசிகர்கள்

நடிகர் அஜித்தின் பைக் பயண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ள நிலையில், அஜித் தனது மகனுடன் நிற்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

ரசிகர்களால் செல்லமாக ‘தல’ என அழைக்கப்படுபவர் நடிகர் அஜித். இவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களைக் கொண்டிருக்கும் நடிகர்களில் அஜித்தும் ஒருவர். அதிலும் அஜித் ரசிகர் தீவிரமானவர்கள். அது எந்த அளவுக்கு என்றால் வலிமை பட அப்பேட்டை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலியிடம் கேட்டிருக்கிறார்கள் என்றால் தெரிந்துக்கொள்ளுங்கள்.

தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில், 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அஜித், தற்போது போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் இரண்டாவது முறையாக வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வலிமை திரைப்படத்தில் ஏற்கனவே டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அஜித் இந்தியா முழுவதும் சுற்றும் வகையில் பைக் பயணத்தை தொடங்கினார். அதில் வடஇந்தியாவில் பயணத்தை தொடங்கிய அஜித், வாகா எல்லையில் ராணுவ வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. மேலும் பைக்கில் படுத்தவாறு வெளியிட்ட புகைப்படமும் ரசிகர்கள் பகிரப்பட்டு வருகிறது.

தொடர்ந்து  இந்த பயணத்தின் மற்றுமொரு புகைப்படம் வெளியானது.  அதில் அஜித் உயரமான மலையின் பாறை முகட்டில் நின்று எடுத்திருக்கும் புகைப்படம். இதைப் பார்த்து ரசிகர்கள் இவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டாம் என கோரிக்கை வைத்தனர்.

இதற்கிடையே நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக பைக் ரைடிங் செய்யும் புகைப்படங்கள், வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 

அந்த வகையில் அஜித்குமாருடன் அவரது மகனான ஆத்விக் தலையில் ஹெல்மெட் மாட்டியபடி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது. இதனை வருங்கால பைக் சாம்பியன் குட்டி தல என பதிவிட்டு அஜித் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Ajith Thala Ajith Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment