Advertisment

அஜித் மாமியார் இவங்க தானா? வைரல் போட்டோ

நடிகர் அஜித் மாமியார் ஆலிஸின் பிறந்தநாள் அண்மையில் கொண்டாடப்பட்டுள்ளது. அதில் நடிகை ஷாலினி, ஷாமிலி, ரிச்சர்ட் ரிஷி, அனொஷ்கா, ஆத்விக் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Actor Ajith mother in law photo goes viral Tamil News

நடிகர் அஜித் மாமியார் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Actor Ajith | Tamil Cinema News: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். தற்போது இயக்குநர் மகிழ் திருமேனி எழுதி இயக்கி வரும் விடா முயர்ச்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் அஜித் மாமியார் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் கடந்த 2000 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த தம்பதிக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். 

அஜித் - ஷாலினி காதல் கதை 

நடிகர் அஜித் - நடிகை ஷாலினி காதல் கதை கடந்த 1999 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளிவந்த அமர்க்களம் படத்தில் தான் தொடங்கியது. இப்படத்தின் ஒரு காட்சியில் கத்தியை வைத்து ஷாலினியை அஜித் மிரட்டுவது போன்று இருக்கும். ஷூட்டிங் போது உண்மையிலே கத்தி ஷாலினியின் கையை கீறிவிட, பதறிப்போன அஜித் அவருக்கு உடனடியாக முதலுதவி செய்திருக்கிறார். அன்றைய நாள் ஷூட்டிங் முடிந்த பிறகு பூக்கள் நிறைந்த பொக்கே அனுப்பி நலம் விசாரித்தும் இருக்கிறார் அஜித்.

ஒருமுறை சரண், ஷாலினி, அஜித் ஆகிய மூன்று பேரும் அமர்ந்திருக்க, 'சரண் சீக்கிரம் ஷூட்டிங்க முடிச்சிடுங்க, இல்லைனா நான் ஷாலினிய லவ் பண்ணிடுவேன் போல' என போட்டு உடைத்திருக்கிறார். அதுமுதல் அஜித்துக்குள் காதல் இருப்பதை ஷாலினி உணரத் தொடங்கியுள்ளார். ஒருகட்டத்தில் ஷாலினியிடம் அஜித் காதலை சொல்லிவிட, தனது அப்பாவிடம் பேச சொல்லியிருக்கிறார் ஷாலினி. அதேநேரத்தில், அஜித் பேசுவதற்கு முன்பாகவே ஷாலினியே தனது தந்தையிடம் விவரித்துள்ளார். இதனையடுத்து, இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் கெட்டி மேளம் நடந்தது. 

அஜித் மாமியார் வைரல் போட்டோ 

பொதுவாக, நடிகர் அஜித் தனது குடும்பத்தினருடனும், டிராவல் செய்வதிலும் அதிகம் நேரம் செலவிடுவார். அவரின் குடும்பத்தில் உள்ள பலரும் வெளியுலகிற்கு தெரியும் என்றாலும், அவரது அவரது மாமியார் புகைப்படத்தை பெரிதாக யாரும் பார்த்ததில்லை. இந்த நிலையில், நடிகர் அஜித் மாமியார் ஆலிஸின் பிறந்தநாள் அண்மையில் கொண்டாடப்பட்டுள்ளது. அதில் நடிகை ஷாலினி, ஷாமிலி, ரிச்சர்ட் ரிஷி, அனொஷ்கா, ஆத்விக் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Actor Ajith Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment