விஜயின் அடுத்த படத்தை தயாரிக்கும் நிறுவனம்
வாரிசு படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். தளபதி 67 என தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கான பூஜை கடந்த இரு தினங்களுக்கு முன்பு தொடங்கியது. அன்று முதல் இந்த படம் குறித்து பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில். தற்போது விஜய் நடிக்கும் அடுத்து படத்தை தயாரிப்பது யார் என்ற தகவல் வெளியாகியுளளது.
சமீபத்தில் நடிகர் ஜீவா சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தங்களது சூப்பர் குட் பிலிம்ஸ் இதுவரை 96 படங்களை தயாரித்துள்ளது. கண்டிப்பாக எங்களது 100-வது படத்தில் விஜய் நடிப்பார். இருப்பினும் இயக்குனர் இசையமைப்பாளர் யாரும் உறுதியாகவில்லை என்று கூறியுள்ளார்.
லவ்டுடே படத்தை மோசமாக விமர்சித்த நடிகை
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியாக லவ்டுடே படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். ரஜினியே இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளதாக இயக்குனர் பிரதீப் ரங்நாதன் தெரிவித்திருந்த நிலையில், தற்போது பிரபல நடிகை லவ்டுடே படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
லவ்டுடே படத்தில் ஆண்களை நல்லவர்கள் போலவும் பெண்களை மோனமனவர்கள் போலவும் காட்சி அமைத்துள்ளனர். படத்தில் நாயகியின் தங்கைக்கு தவறாக மெசேஜ் அனுப்பவில்லை என்று நிரூபித்த உத்தமன் பிரதீப் நல்லவன். பிரபல நடிகைகயை பதம் பார்க்கணும் என்று சொன்னால் ரசிக்கிறார்கள். சினிமாவில் பெண்களை இன்னும் தவறாக சித்தரிப்பதை இன்னும் எவ்வளவு காலம்தான் பொறுத்திருக்க முடியும் என்று ஆர்,ஜே. ஆனந்தி கூறியுள்ளார்.
பிரபல காமெடி நடிகர் மரணம்
தமிழ் சினிமாவில் காமெடி குணச்சித்திரம் என பல வேடங்களில் நடித்து வந்த நடிகர் சிவநாராயண மூர்த்தி. விவேக், வடிவேலு உள்ளிட்ட பலருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள இவர், உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். அவரது மரணம் குறித்து திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திருமணம் குறித்து நடிகை அஞ்சலி கருத்து
இயக்குனர் ராம் இயக்கிய கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அஞ்சலி, அடுத்து கலகலப்பு, எங்கேயும் எப்போதும், உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இதில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தபோது இவரும் நடிகர் ஜெய்யும் காதலிப்பதாக தகவல் வெளியானது. இதனிடையே சமீபத்தில் பேட்டி ஒன்றில், காதல் என்பது ஒரு அழகான உணர்வு. அதை சரியாக தேர்வு செய்ய வேண்டும் முன்பெல்லாம் திருமணம் முடிந்தால் நடிகைகள் நடிக்க வரமாட்டார்கள் ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளது. இப்போது திருமணம் குறித்து யோசிக்கவில்லை. கண்டிப்பாக திருமணம் செய்வேன் என்று கூறியுள்ளார்.
பாபா போன்று அஜித் படம் ரீ-ரிலீஸ்?
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வெளியான 2002-ம் ஆண்டு வெளியாக பாபா படம் தற்போது டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட் உள்ளது. இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதேபோன்று அஜித் நடிப்பில் வெளியான படம் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான படம் ஆழ்வார். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் தோல்வியடைந்த நிலையில், தற்போது இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“