‘தல போல வருமா?’... இந்த பாடலை எந்த தல அஜித் ரசிகர் தான் ரசிக்க மாட்டார்கள். தல எதை செய்தாலும் கெத்து தானே. அது ஆளில்லா விமானம் ஓட்டுவதாக இருந்தாலுமே.
Advertisment
தல அஜீத் சிறந்த பைக்ரேசராக இருந்தது தெரியாதவர்கள் குறைவே. பைக் போலவே கார்கள் மீதும் கொண்ட பிரியத்தால் கார் ரேசராகவும் பல சர்வதேச கார்பந்தயங்களிலும் கலந்து கொண்டார்.
தக்ஷன் குழுவுடன் இணைந்து ஆளில்லா விமானம் ஓட்டிய தல அஜித் :
கார் ரேசர் போலவே குட்டி விமானங்களை இயக்குவதிலும் நிபுணத்துவம் அடைந்தார் அஜீத், அதனால் பல பல்கழைக்கழகங்களுக்கு குட்டி விமானம் இயக்குவதற்கு அந்தந்த பல்கழை மாணவர்களுக்கு பயிற்சியளித்து வருகிறார்.
கல்லூரி மாணவர்கள் பல விதமான மனித சேவைகளுக்கு குட்டி விமானம் மூலம் தீர்வு உருவாக்கும் வகையில் ஆராய்ச்சிகளில் ஈடுபடுகின்றனர்.
அப்படியாக அஜீத் உறுப்புதானத்துக்கு உதவும் வகையில் தனது குழுவுடன் குட்டி விமானம் இயக்கும் பயிற்சியை கொடுத்துள்ள வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.