Advertisment

தல பிரியாணி ரகசியம்

தொழிலாளியும் தனக்கு சமமாக சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் அஜித்தின் குணத்தை சிலாகிக்கின்றனர் சினிமா உலகத்தினர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Happy Birthday Ajith: தன்னம்பிக்கை தரும் அஜித்தின் மாஸான பஞ்ச் டயலாக்ஸ்!

'அஜித்தின் பெருந்தன்மை, உதவி செய்யும் குணம் எல்லோருக்கும் தெரியும். அவர் சிறந்த சமையல்காரர் என்பது எல்லோருக்கும் பில்லா ஷூட்டிங் சமயத்தில் தான் தெரியும். தான் நடிக்கும் படத்தில் பணியாற்றிய டெக்னிஷியன்கள் அனைவருக்கும் தன் கையாலேயே சமைத்து போட்டு அவர்களை சாப்பிட வைத்து அழகு

Advertisment

பார்ப்பார். அதிலும் அஜித் சமைக்கும் பிரியாணிக்கு யூனிட்டே அடிமை. ஒவ்வொரு பட ஷூட்டிங்கின் போதும் அஜித் பிரியாணிக்காகவே யூனிட் காத்திருக்கும்' என்றார், இயக்குநர் வெங்கட் பிரபு.

அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு அஜித்தோட பிரியாணியில்? வெங்கட்பிரபுவிடம் கேட்டோம்.

‘’எனக்கே அஜித் சார் தான் சொல்லிக்கொடுத்தார் பிரியாணி மேக்கிங். பாசுமதி ரைஸை நல்லா களைஞ்சு

போட்டு அதுல சிக்கனை கழுவி போட்டு கொதிக்க வெச்சு, தனியா மசாலா ரெடி பண்ணிக்கனும். சில கம்பெனிகள்ல மசாலாவை ரெடி பண்ணி விக்கிறாங்க. ஆனாலும் எல்லா பொருட்களையும் வாங்கி கையால அரைச்சு செய்யிறது தான் டேஸ்டே... இதையெல்லாம் சொல்றதுக்கு ஈஸியா இருக்கும். ஆனா செய்யும்போது

அஜித் சாரோட கைப்பக்குவம் தான் அந்த டேஸ்டுக்கு காரணம். அவர் சமையல் பண்ணும்போது நாங்க ஹெல்ப் பண்ணலாம்னு போனா கூட விட மாட்டார். வெங்கட் நான் பார்த்துக்கறேன்...னுடுவார். முக்கியமா எந்த பொருளை எவ்வளவு சேர்க்கணும், இத்தனை கிலோ அரிசிக்கு இத்தனை கிலோ சிக்கன், இவ்வளவு மசாலா

பொருட்கள் தான் சேர்க்கணும்னு அவருக்கு கரெக்டா தெரியும். அடுத்ததா எவ்வளவு நேரம் இருக்கணும்கறது...வதக்கும்போது தீயை அதிகமா வெச்சிட கூடாது... மீடியமா வெச்சி தான் வதக்கணும்பார்...’’ என்றார்.

அஜித் பிரியாணி செய்ய தொடங்கியது எப்படி? மூத்த டெக்னிஷியன் ஒருவர்,  அஜித் பிரியாணி செய்தபோது தான் அருகில் இருந்த அனுபவங்களை விவரித்தார். ’பின்னி மில்லில் நடந்த ஷூட்டிங்னு நினைக்கிறேன்.

தொழிலாளிகளை தொழிலாளிகள் மாதிரி பார்க்க மாட்டார் அஜித் சார். தன் குடும்பத்தில் ஒருவரா தான் பார்ப்பார். அப்படி ஒருநாள் டெக்னிஷியன்கள் புரடக்‌ஷன் சாப்பாடு சாப்பிட்டுட்டு இருக்கும்போது அருகில் போய் விசாரிச்சுட்டு இருந்தார். அஜித் சாரோட கவனம் சாப்பாட்டு தட்டு மேல போச்சு. அந்த சாப்பாடு சரியில்லைனு தெரிஞ்சதும் தன் வீட்டுலேருந்தே  சமையல் பொருட்கள், அரிசி, மட்டன்லாம் கொண்டு வந்து சமைச்சு கொடுத்தார். சமைக்கிறதுக்கு ஆரம்பத்துல டிப்ஸ் கொடுத்துட்டு நடிக்க போய்டுவார்.

புரடக்‌ஷன்ல சில பேர் பிரியாணியை தொழிலாளர்களுக்கு தராமல் எடுத்துட்டு போய்டறாங்கனு கேள்விபட்ட பிறகு தான் பரிமாறிட்டு அப்புறம் சாப்பிட போக ஆரம்பிச்சார். அந்த ஷெட்யூல் முழுக்கவே சமைச்சு போட்டவர். ஹைதராபாத்ல ஷூட்டிங் இருந்தப்ப ஒரு ஹோட்டல்லேருந்து பிரியாணி வரவழைச்சார்..’’ என்று

நினைவுகளை அசை போட்டார் அந்த தொழிலாளி.

அஜித்துடன் நடித்த பார்வதி நாயர் ‘’ எனக்கு இன்னும் அந்த பாக்கியம் கிடைக்கலை. நான் யூனிட்ல ஜாய்ண்ட் பண்ணும்போது அஜித் சமைச்சு எல்லோரும் சாப்பிட்டுட்டாங்க... நான் ரொம்ப வருத்தப்பட்டதும் அஜித் சார் பிரியாணி செய்யிற முறையை சொல்லிக்கொடுத்தார். கிரேவி செய்யும் முறை - முதலில் சட்டி காய்ந்ததும்எண்ணையும் டால்டாவையும் ஊற்றி நல்ல கய்ந்ததும்ஒரு விரல் அளவு பட்டை , கிராம்பு , எலக்காய்

போடவும். அது வெடித்ததும் நீளமாக வெட்டி வைத்துள்ள வெங்காயம் அனைத்தும் போட்டு நன்றாக கிளறி மூடி போடவும். நல்ல பொன் முறுவல் ஆனதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக கிளறி விடவும். ஓவ்வொரு தடவை கிளறும் போதும் மூடி போட்டு மூடியே தான் வைக்க வேன்டும்.அடுப்பை சிம்மில் வைக்கவேண்டும்.

பிறகு கொ . மல்லி புதினா வை போட்டு கிளறவும்அதன் பின் தக்காளி ப.மிளகாய் போடவும்.இரன்டு நிமிடம் கழித்து மிளகாய் தூள், மஞ்ஜள் தூள், உப்பு தேவையான் அளவு போட்டு வேகவிடவும்.நல்ல எண்ணையில் எல்லா பொருட்களும் வதங்கியவுடன் மட்டனை போடவும். போட்டு தீயை அதிகபடுத்தி நன்றாக முன்று

நிமிடம் கிளறவும். பிறகு தயிரை நல்ல ஸ்பூனால் அடித்து ஊற்றவும். அப்படியே சிம்மில் வைத்து 20 நிமிடம் வேகவிடவும்.வெந்ததற்கு அடையாளம் எண்ணை மேலே மிதக்கும்.தீயின் அள‌வை குறைத்து வைத்து செய்வ‌தால் அடி பிடிக்காது.

அடுத்தது பிரியாணி செய்யும் முறை - அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்துவிடவும். ஊறவைத்த அரிசியை வடிக்கவும் .உலை கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணையும், எலுமிச்சை பழமும் பிழியவும். வெந்ததும் நல்ல பதமாக பார்த்து ஓவ்வொன்றாக முக்கால் பதத்தில் வடித்தல் போதும். உடனே சிம்மில் வெந்து

கொண்டிருக்கும் கிரேவியில் கொட்டவும். சமப்படுத்தி சட்டிக்கு கிழே தம் போடும் கண் தட்டு (அல்லது) டின் மூடி வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு மேலே வடித்த கஞ்சி சட்டியை வைத்து தம்மில்

விடவும்ஐந்து நிமிடம் கழித்து நல்ல ஒரு முறை கிளறி விட்டு ரெட்கலர் பொடியை அந்த சுடு கஞ்சி இரன்டு டேபுள் ஸ்பூனில் கரைத்து துவிவிடவும்.  அதன் பின் இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு மறுபடியும் 15 நிமிடம் தம்மில்

விடவும்.பிறகு பத்து நிமிடம் புழுங்க விட்டு மேலிருந்து கீழாக நல்ல உடையாமல் பதமாக கிளறி சூடாக பறிமாறவும்

இப்போது நடந்துகொண்டிருக்கும் ஷூட்டிங்கிலும் அஜித் பிரியாணி சமைத்துபோட்டிருக்கிறார். இன்னொரு முறை மீன் குழம்பு செய்து சாப்பிட வைத்திருக்கிறார்... சக தொழிலாளியும் தனக்கு சமமாக சாப்பிட வேண்டும்

என்று நினைக்கும் அஜித்தின் குணத்தை சிலாகிக்கின்றனர் சினிமா உலகத்தினர்.

அஜித் ஆரம்பித்து வைத்த பாதையிலேயே விஜய், ப்ரியா ஆனந்த் போன்ற சிலர் பயணிப்பது சினிமா தொழிலாளர்களுக்க் ஆரோக்யமான ஒன்று.

Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment