New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Aadivk.jpg)
அஜித் மகன் ஆத்விக்
நடிப்பு பைக் ரேஸ் என சுற்றி வரும் அஜித்துக்கு மாறாக அவரது மகன் ஆத்விக் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் மிகுந்தவராக உள்ளார்.
அஜித் மகன் ஆத்விக்
நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக்கின் விளையாட்டுத்திறனை பார்த்து வியந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள நடிகர்களின் பட்டியலில் முன்னணியில் இருந்து வருகிறார். நடிப்பு மட்டுமல்லாமல் துப்பாக்கி சுடுதல், பைக்ரேஸ் உள்ளிட்ட விளையாட்டு தொடர்பான செயல்களில் ஆர்வம் காட்டி வரும் அஜித் அவ்வப்போது தனது பைக்கில் சுற்றுலா என்ற பெயரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வலம் வந்துள்ளார்.
அதேபோல் சமீபத்தில் இந்தியாவின் அண்டை நாடாள நேபாளத்தில் இருந்து உலக டூர் சுற்றுலாவை தொடங்கிய அஜித் விடா முயற்சி படத்தின் படப்பிடிப்புக்காக தற்போது சென்னை திரும்பியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தனது பயணத்தை மீண்டும் தொடர உள்ளார். அஜித் உலக டூர் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தக்கட்ட பயணம் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
நடிப்பு பைக் ரேஸ் என சுற்றி வரும் அஜித்துக்கு மாறாக அவரது மகன் ஆத்விக் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் மிகுந்தவராக உள்ளார். ஐஎஸ்எல் தொடரில் விளையாடி வரும் சென்னையின் எப்.சி அணியின் யூத் டீமிற்காக களமிறங்கிய விளையாட உள்ள ஆத்விக் கால்பந்து விளையாடுவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆத்விக்கிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ஆத்விக் சென்னையின் எஃப் சி அணியின் ஜெர்சி அணிந்தபடி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வரும் நிலையில், ஒருசில நெட்டிசன்கள் ஆத்விக் முன்னணி கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோ போன்று ஸ்டைலாக கால்பந்து விளையாடுவதாக பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.