Tamil Movie Ajith Thunivu Release And Review : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர்களில் முக்கியமானவர். இவர் நடிப்பில் தற்போது தயாராகியுள்ள படம் துணிவு. நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் எச்.வினோத், நடிகர் அஜித் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் துணிவு.
மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான 3 பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் கடந்த டிசம்பர் 31-ந் தேதி வெளியான துணிவு படத்தின் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த படம் தொடங்கும் முன்னரே அஜித்தின் கெட்டப் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவியது. அதேபோல் டிரெய்லரில் அவரின் ஆட்டிடியூட் ஸ்டைலிஷ் நடை என அஜித் அசத்தியுள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள துணிவு படத்தில் சில வருட இடைவெளிக்கு பிறகு அஜித் நெகடீவ் ரோலில் நடித்துள்ளார். இது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
'தல யோட சினிமா வாழ்க்கைல காலத்துக்கும் நின்னு பேசுற மாதிரி ஒரு முரட்டு ஆக்சன் படம்' என்று நடிகர் அஜித்தின் துணிவு படத்திற்கு ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகிறார்கள்.
தல யோட சினிமா வாழ்க்கைல காலத்துக்கும் நின்னு பேசுற மாதிரி ஒரு முரட்டு ஆக்சன் படம் 🔥💪#blockbusterthunivu#ajithkumar | #thunivu pic.twitter.com/JqRBRcO04v
— Thanga Pandi – AFC ᵀʰᵘⁿᶦᵛᵘ 👑💥 (@Thanga_PandiAFC) January 11, 2023
துணிவு த்ரில்லிங், பல திருப்பங்களுடன் கூடிய இறுக்கமான வங்கித் திருட்டு. அஜித்குமார் மாஸ் வடிவத்தில் இருக்கிறார் மற்றும் டார்க் நிற நிழல்களுடன் பார்ப்பதற்கு விருந்தளிக்கிறது. மஞ்சுவாரியர் நேர்த்தியான வேலை செய்கிறார். எச்.வினோத் அதை ரசனையாகவும் சுவாரஸ்யமாகவும் ஆக்கியுள்ளார்.
#thunivu Thrilling, taut bank heist with lots of twists & turns. #ajithkumar is in devastating form and a treat to watch with shades of grey. @ManjuWarrier4 does a neat job. #hvinoth has made it racy & interesting.
— Sreedhar Pillai (@sri50) January 10, 2023
#thunivu is all yours 🔥🔥 Enjoy the festive season with family and friends✨✨#thunivufromtoday #thunivupongal #ajithkumar #hvinoth @zeestudios_ @bayviewprojoffl @redgiantmovies_ @kalaignartv_off @netflixindia @sureshchandraa #romeopictures @mynameisraahul @ghibranofficial pic.twitter.com/n8yWMiaMbP
— Boney Kapoor (@BoneyKapoor) January 11, 2023
கேஜிஎப் எல்லாம் என்ன படம் சார். இதுதான் படம். பணத்தை பற்றி விழிப்புணர்வு கொடுத்திருக்கு.
படம் மிகவும் நன்றாக இருக்கிறது. கதை ஆழமாக இருக்கிறது. இதுபோன்ற நல்ல கதையை வெகு நாட்களுக்கு பிறகு அஜித் தேர்வு செய்திருக்கிறார். தினா படத்தில் அவரை பார்த்ததுபோல செம்மயாக நடத்திருக்கிறார்.
அஜித் நடிப்பில் வெளியாக உள்ள துணிவு படத்தை வரவேற்க அஜித் ரசிகர்கள் தயாராகி வரும் நிலையில், செண்ட மேளம் மற்றும் தாரை தப்பட்டை வைத்து அசத்தி வருகின்றனர்.
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் திரை எண்ணிக்கை மற்றும் முன்பதிவு ஆகிய இரண்டிலும் தமிழகத்தில் முன்னணியில் இருப்பதாக திரைப்பட வர்த்தக நிபுணர் ரமேஷ் பாலா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் ட்வீட் செய்துள்ளார், துணிவு திரை எண்ணிக்கை மற்றும் விளம்பர முன்பதிவு இரண்டிலும்.. தமிழகம் முழுவதும் முன்னணியில் உள்ளது. என குறிப்பிட்டுள்ளார்.