Advertisment

சிவா தோள் மீது கை போட்டு... அஜித் மனசுல இவ்ளோ பாசமா?!

சமீபத்தில் பிரின்ஸ் படத்துக்கு சமூகவலைதளங்களிலும் யூடியூப்போன்ற காணொளிகளிலும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை விரும்பாத கண்ணுக்குத் தெரியாத எதிரிகளால் பலத்த எதிர்ப்பு வந்தது.

author-image
WebDesk
Nov 11, 2022 14:41 IST
New Update
சிவா தோள் மீது கை போட்டு... அஜித் மனசுல இவ்ளோ பாசமா?!

திராவிட ஜீவா

Advertisment

சினிமாவில் தன்னைப்போலவே எந்தவித பின்ணணியும் இல்லாமல் உச்சத்தை தொட்டதால் ரஜினிக்கு அஜித் மீது தனி அக்கறை உண்டு. தலைவருக்கு அடுத்து தல என்று ரசிகர்களும் அவரை ஆதரித்தனர் அதேபோல இந்த காலகட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான இருந்து ஷாருக்கானைபோல மிகவும் போராடி முன்ணணி நடிகர்களின் வரிசையில் இடம் பிடித்திருப்பதை ரஜினியும் அஜித்தும் தங்களைப்போன்ற ஒருவன் வெற்றி பெற்றிருப்பதை தங்களுடைய வெற்றியாகவே பார்க்கின்றனர்

ஓவ்வொரு படத்துக்கும் தலைவர் பேசி பாராட்டுவது தனக்கு உத்வேகத்தை அளிப்பதாக சிவகார்த்திகேயன் பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்திருந்த நிலையில் சமீபத்தில் பிரின்ஸ் படத்துக்கு சமூகவலைதளங்களிலும் யூடியூப்போன்ற காணொளிகளிலும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை விரும்பாத கண்ணுக்குத்தெரியாத எதிரிகளால் பலத்த எதிர்ப்பு வந்தது.

publive-image

இதனால் எப்போதும் மிக சாதாரணமாக கடந்துபோகும் சிவகார்த்திகேயன் நான்கு புறமும் வந்த எதிர்ப்பால் இதை எப்படி எதிர்கொள்வது என்கிற சிந்தனையில் இருந்தபோது ஒரு நண்பரின் குடும்ப நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக அஜித் வந்திருக்கிறார். அப்போது அஜித் நேராக சிவகார்த்திகேயனை தோள்மீது கைபோட்டு இதுபோன்ற நேரங்களில் மனம் தளர வேண்டாம் சிவா நீங்க பெரிய உயரத்துக்கு வந்துவிட்டதையே இது காட்டுகிறது. இப்போதுதான் உங்களுக்கு யார் நல்லவங்க யார் எதிராளி என்கிற அனுபவம் வரும்.

இதை பாசிட்டிவ்வா எடுத்துக்கோங்க கவலைபடவேண்டாம் என்று ஆறுதல் கூறியதால் சிவகார்த்திகேயன் மனதளவில் உற்சாகமும் அஜித் சார் நம் மீது இவ்வளவு அக்கறையுடன் இருக்கின்றாரே என்று நெகிழ்ந்து போனாராம். இந்த நிகழ்வு குறித்து சிவா தனது நண்பர்களிடம் அஜித் சார் ஒரு அண்ணனைபோல பேசினார் என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறாராம்

ரஜினி அஜித் போன்ற நடிகர்கள் போன்று தானாகவே வென்ற சுயம்பு சிவகார்த்திகேயன் என்பதை தலைவர் மற்றும் தல அங்கீகரித்ததை ப்ரின்ஸ் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தங்களது பிரின்ஸ்க்கு பக்கபலமாக கருதுகின்றனர்

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Cinema #Actor Ajith #Siva Karthikeyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment