ஸ்கூல்ல எனக்கு படிப்பு ஏறல... பிஸினஸ் பண்ணேன்; சினிமாவுக்கு வந்தது விபத்து: அஜித் த்ரோபேக் வீடியோ வைரல்!

நடிகர் அஜீத்குமாரின் ஆசை மற்றும் படிப்பு குறித்து அவர் அளித்த பழைய நேர்காணல் ஒன்று தற்போது பரவி வருகிறது. அதில் சினிமாவிற்குள் தான் வந்தது எதிர்பாராமல் நடந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

நடிகர் அஜீத்குமாரின் ஆசை மற்றும் படிப்பு குறித்து அவர் அளித்த பழைய நேர்காணல் ஒன்று தற்போது பரவி வருகிறது. அதில் சினிமாவிற்குள் தான் வந்தது எதிர்பாராமல் நடந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Ajith Hospi.429.jpg

நடிகர் அஜீத்குமார் ஊடகங்கள் மற்றும் எந்த தொலைக்காட்சிக்கும் பேட்டி கொடுப்பதை பெரிதும் தவிர்த்து விட்டார்.  இந்நிலையில் இவரின் பழைய நேர்க்காணல் ஒன்று பரவி வருகிறது. அதில் அவர் தனது படிப்பு மற்றும் கனவு குறித்து கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்து இருப்பவர்தான் நடிகர் அஜீத்குமார்.

Advertisment

1990களில் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய அஜீத் 1992 ஆம் ஆண்டு என் வீடு என் கணவர் என்ற தமிழ்த் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் 1993 இல் வெளியான அமராவதி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆசை, காதல் கோட்டை போன்ற பல காதல் மற்றும் குடும்பப் படங்களில் நடித்த பிறகு, 1999 ஆம் ஆண்டு அமர்க்களம் போன்ற படங்களில் தனது ஆக்‌ஷன் திறமைகளை வெளிப்படுத்தி ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். 

அடுத்தடுத்து வாலி, வில்லன், வரலாறு போன்ற படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளையும் வென்றார். தீனா, சிட்டிசன், பில்லா, மங்காத்தா, வீரம், விவேகம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை போன்ற பல வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்களிலும் நடித்துள்ளார். அஜித் குமார் 2003 ஃபார்முலா ஆசியா பி.எம்.டபுள்யூ சாம்பியன்ஷிப் மற்றும் 2010 FIA ஃபார்முலா டூ சாம்பியன்ஷிப் போன்ற பந்தயங்களில் பங்கேற்றுள்ளார். மோட்டார் பந்தயத்தில் இவருக்குள்ள ஆர்வம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். 

அஜித்குமாரின் திரைத்துறை பங்களிப்புகள் மற்றும் மோட்டார் பந்தய விளையாட்டில் அவருக்குள்ள ஆர்வம் மற்றும் அதில் அவர் ஆற்றிய சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக 2025 ஆம் ஆண்டு  இந்திய அரசு நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதை அறிவித்தது. 

Advertisment
Advertisements

அஜீத்குமார் ஊடகங்கள் மற்றும் எந்த தொலைக்காட்சிக்கும் பேட்டி கொடுப்பதை பெரிதும் தவிர்த்து விட்டார். அதே போல் சினிமா நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கேற்பதை குறைத்துக்கொண்டார். இந்நிலையில் இவரின் பழைய நேர்க்காணல் ஒன்று பரவி வருகிறது. அதில் அவர் தனது படிப்பு மற்றும் கனவு குறித்து கூறியுள்ளார். 

பள்ளியில் படிக்கும் போது தனக்கு படிப்பு சுத்தமாக ஏறவில்லை என்றும் ஆட்டோ மொபைல் இன்ஜினீரிங் கற்றுக்கொள்ள வேண்டும், ஒர்க் ஷாப் வைக்க வேண்டும் என நினைத்ததாகவும், பின் சென்னை மோட்டார்ஸில் பணியில் சேர்ந்தேன், அது வீட்டில் உள்ள யாருக்கும் பிடிக்கவில்லை என்றும் கூறினார். அதனால், கார்மெண்ட் ஒன்று ஆரம்பித்து எக்ஸ்போர்ட் செய்ய நினைத்ததாகவும் அவர் கூறினார். சினிமாவிற்குள் தான் வந்தது எதிர்பாராமல் நடந்தது என்றும், மேலும் அப்போதே கண்டிப்பாக சொந்தமாக கார்மெண்ட் ஒன்று ஆரம்பித்து எக்ஸ்போர்ட் செய்ய வேண்டும் என தனக்கு விருப்பம் உள்ளதாக தன்னுடைய ஆசையாய் வெளிப்படுத்தியுள்ளார்.

இதை தொடர்ந்து அஜித்தை முழு கதாநாயகனாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய ஆசை படம் பற்றி கேட்டதற்கு, ”ஆசை மற்றும் காதல் கோட்டை போன்ற வெற்றி படங்களின் பெருமை இயக்குனர்களை மட்டும் தான் சென்றடையும். அவர்கள் தான் கதையை உருவாக்கி, கதாப்பாத்திரத்தையும் உருவாக்கி வெற்றியை கொடுக்கிறார்கள். எனவே அவர்களுக்கு தான் முழு பாராட்டுக்களும் சென்றடைய வேண்டும்” என கூறியுள்ளார்.

Posted by Saravanan Saro on Sunday, May 11, 2025
Ajith Actor Ajith

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: