/tamil-ie/media/media_files/uploads/2019/03/New-Project-2.jpg)
nerkonda parvai நேர்கொண்ட பார்வை
இயக்குநர் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் பிங்க் படத்தின் ரீமேக்கிற்கு நேர்கொண்ட பார்வை என்று பெயரிடப்பட்டுள்ளது.
பொங்கல் ஸ்பெஷல் படமாக சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தல அஜித் அடுத்தப்படியாக களமிறங்கியிருக்கும் படம் ‘தல 59’. ஹிந்தியில் வெளியான பிங்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம்.
அஜித்தின் நேர்கொண்ட பார்வை
இப்படத்தை இயக்குநர் எச். வினோத் தமிழில் உருவாக்குகிறார். இப்படத்தில் நடிப்பதற்காக முக்கிய கதாபாத்திரங்களின் தேர்வு நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் பெயர் மற்றும் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
With the blessings of Madam @SrideviBkapoor here is theTitle & 1st look of @nerkondapaarvai@thisisysr@ShraddhaSrinath@dhilipaction@ZeeTamil@DoneChannel1@ProRekha@ZeeStudios_pic.twitter.com/y8QS1HvNDf
— Suresh Chandra (@SureshChandraa)
With the blessings of Madam @SrideviBkapoor here is theTitle & 1st look of @nerkondapaarvai@thisisysr@ShraddhaSrinath@dhilipaction@ZeeTamil@DoneChannel1@ProRekha@ZeeStudios_pic.twitter.com/y8QS1HvNDf
— Suresh Chandra (@SureshChandraa) March 4, 2019
நேர்கொண்ட பார்வை என்ற பெயருடன் போஸ்டர் வெளியான இந்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித் குமார், முதல்முறையாக வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதால் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. மே மாதம் இந்தப் படம் ரிலீஸ் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.