அவனுக்கு பிளான் போட்டுக் கொடுத்ததே நான் தான்: கே.பி.ஒய் பாலாவுக்கு ஆதரவாக இறங்கிய அமுதவாணன்

நடிகர் பாலா குறித்து பல செய்திகள் பரவி வரும் நிலையில் பாலாவிற்கு ஆதரவாக நடிகர் அமுதவாணன் பேசியுள்ளார்.

நடிகர் பாலா குறித்து பல செய்திகள் பரவி வரும் நிலையில் பாலாவிற்கு ஆதரவாக நடிகர் அமுதவாணன் பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
amutha

அவனுக்கு பிளான் போட்டுக் கொடுத்ததே நான் தான்: கே.பி.ஒய் பாலாவுக்கு ஆதரவாக இறங்கிய அமுதவாணன்

தனியார் தொலைக்காட்சியில் வெளியான ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சி மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகர் பாலா. இவர் தனது காமெடி கவுண்டர்களால் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். இவர் நடிப்பில் சமீபத்தில் ‘காந்தி கண்ணாடி’ திரைப்படம் வெளியான. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

நடிகர் பாலா நடிப்பது மட்டுமல்லாமல் கஷ்டப்படும் மக்களுக்கு உதவியும் செய்து வருகிறார். இலவச ஆம்புலன், ஆட்டோ போன்றவற்றை வழங்கி மக்களுக்கு சேவை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், மக்கள் நலனிற்காக கிளினிக் ஒன்றும் கட்டி வருகிறார். இப்படி தான் உழைக்கும் பணத்தை எல்லாம் மக்கள் நலனுக்காக நடிகர் பாலா செலவழித்து வருகிறார்.

இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் நடிகர் பாலாவிற்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது. அதனால் தான் அவர் இவ்வாறு உதவி செய்கிறார். இந்த பணங்கள் எல்லாம் பாலாவின் சொந்த உழைப்பில் இருந்து கிடைத்தது இல்லை. அவர் சர்வதேச கைக்கூலி என்று பலர் விமர்சனம் செய்து வந்தனர். இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் பாலா வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், “நான் என் சொந்த உழைப்பில் கிடைத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவி செய்கிறேன். கஷ்டப்பட்டு ஓடி ஓடி உழைத்த பணத்தில் தான் உதவி செய்கிறேன். நான் உதவி செய்வதற்காக ஒரு ரூபாய் கூட யாரிடமும் வாங்கியது இல்லை. நான் சர்வதேச கைக்கூலி எல்லாம் கிடையாது சாதாரண தினக்கூலி” என்றார்.

Advertisment
Advertisements

இந்நிலையில், நடிகர் பாலாவிற்கு ஆதரவாக நடிகர் அமுதவாணன் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “பாலாவிற்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. ஏனென்றால் அவன் வறுமையில் இருந்து வந்தவன். இன்று அவன் சம்பாதிக்கும் காசு அனைத்தையும் மக்களுக்காகச் செலவழிக்கிறான் என்றால், சிறுவயதில் அவன் பட்ட கஷ்டங்கள்தான் அதற்குக் காரணம்" என்றார்.

மேலும், “தன்னுடைய உழைப்பால் உயர்ந்த பாலா, தான் அனுபவித்த கஷ்டங்களை மற்றவர்கள் அனுபவிக்கக் கூடாது என்ற எண்ணத்தில், வசதியில்லாத ஏழைக் குழந்தைகளை படிக்க வைப்பது, வயதில் பெரியோர்களுக்கு உதவுவது, மலைவாழ் மக்களுக்காக ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுப்பது எனப் பல உதவிகளைச் செய்து வருகிறார்” என்றார்.

Cinema KPY Bala

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: