காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம் 8ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தின் வாழ்வாதார பிரச்னையான காவிரி பிரச்னையில், சுப்ரிம் கோர்ட் உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீவிர போராட்டம் நடந்து வருகிறது. ஆளும் கட்சி, எதிர்கட்சியின் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதே போல தூத்துக்கு ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என 50 நாட்களாக அந்த பகுதி மக்கள் போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர்,நடிகைகள் 4ம் தேதி முதல்வரை சந்திக்க ஊர்வலமாக செல்கிறார்கள். இது கடும் சர்சையை உருவாக்கியது. தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையில் கருத்துக் கூட சொல்லாமல், சொந்த பிரச்னைக்காக நடிகர், நடிகைகள் போராடுவதா? என விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தென்னிந்திய நடிகர் சங்கம் திரை உலகை சார்ந்த அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், மத்திய அரசை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் வரும் ஏப்ரல் மாதம் 8-ம் தேதி ஞாயிறு அன்று காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை சென்னையில் கண்டன அறவழி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது.
இவ்வாறு நடிகர் சங்கம் சார்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.