/tamil-ie/media/media_files/uploads/2023/04/abirami.jpg)
அபிராமி வெங்கடாச்சலம்
பாலியல் புகாரில் சிக்கியுள்ள கலாக்ஷேத்ரா அறக்கட்டளையை ஆதரித்து நடிகையும் முன்னாள் கலாக்ஷேத்ரா மாணவியுமான அபிராமி வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
சென்னை திருவான்மயூர் பகுதியில் இயங்கி வரும் கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் கலைக்கல்லூரியில், பணியாற்றி வரும் பேராசிரியர்கள் மீது கல்லூரி மாணவிகள் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த சில தினங்களாக கலாக்ஷேத்ரா அறக்கட்டளை பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் கலாக்ஷேத்ரா அறக்கட்டளைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நடிரகை அபிராமி வெங்கடாச்சலம் தற்போது பெரும் விமர்சனத்தை சந்தித்து வருகிறார். நெட்டிசன்கள் அவரை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழச்சியின் மூலம் பிரபலமான நடிகை அபிராமி வெங்கடாச்சலம், அஜித் நடிப்பில் வெளியான நேர்கோண்ட பார்வை படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தில் பெண்கள் நோ என்று சொன்னால் அதற்கு நோ என்றுதான் அர்த்தம் என்று பேசிவிட்டு தற்போது பாலியல் குற்றச்சாட்டு கூறும் மாணவிகளுக்கு எதிராக குரல் கொடுப்பது குறித்து நெட்டிசன்கள் அவரை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
ருக்மணி தேவி நுண்கலைக் கல்லூரியின் (RDCFA) முன்னாள் மாணவியின் புகாரின் அடிப்படையில், சென்னை காவல்துறை வழக்குப் பதிவு செய்து, உதவிப் பேராசிரியர் ஹரி பத்மன் என்பரை கைது செய்துள்ளனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்), 506 (குற்றவியல் மிரட்டல்) மற்றும் தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4 (பெண்களைத் துன்புறுத்துவதற்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், பத்மன் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீநாத் ஆகிய மூன்று இசைக் கலைஞர்களின் சேவையும் நிறுத்தப்பட்டது.
இதனிடையே சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அபிராமி, கலாக்ஷேத்ராவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. “நான் கலாக்ஷேத்ரா முன்னாள் மாணவி. கதையின் ஒரு பக்கத்தை மட்டும் நாம் ஒருபோதும் பார்க்கக்கூடாது என்பதால், இது குறித்து கருத்து தெரிவிக்க எனக்கு ஆர்வம் இல்லை. கதையின் ஒரு பக்கத்தை மட்டும் தெரிந்துகொண்டு, மக்கள் பலவிதமான கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.
89 ஆண்டுகளில், அந்த நிறுவனத்தை குற்றம் சொல்ல எதுவும் நடக்கவில்லை. கலாக்ஷேத்திரர்கள் அல்லாதவர்கள் கூட இந்த நிறுவனம் மீது தங்கள் நன்மதிப்பை வழங்குகிறார்கள். கலாக்ஷேத்ராவின் பெயரை உச்சரிக்க முடியாதவர்கள் அந்த நிறுவனத்தைப் பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர். இது என்னை காயப்படுத்துகிறது என்று அபிராமி வெங்கடாச்சலம் தெரிவித்திருந்தார்.
Abhirami Venkatachalam!
Next time, hire a PRO to help draft public statements for you.
You clearly suck at public speaking and have dug yourself up a very deep grave.
Good luck getting out of this one, sweetie.
P.S: You should probably watch this movie called Nerkonda Paarvai.— Aditi Prasad (@AditiPrasad90) April 4, 2023
தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தால் சம்மன் அனுப்பப்பட்ட கலாக்ஷேத்ரா அறக்கட்டளை இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் குறித்தும் பேசிய அவர், “ரேவதி மேடம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க விரும்புகிறேன். அவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். 10 வருடங்களாக இந்த தொல்லை நடந்து வந்ததாகவும், அப்போது அவர் இயக்குநராக இல்லை என்றும் கூறுகின்றனர். ஆனால் மக்கள் எல்லாவற்றிற்கும் அவர் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.
மேலும், ஆசிரியை (பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்) தனது நிலைப்பாட்டை விளக்குவதற்கு ஒருபோதும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு ஒரு குடும்பம், ஒரு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர், ஆனால் உண்மையில் யாரும் அதைப் பற்றி சிந்திக்கவில்லை, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சம்மதம் பற்றி தமிழ் திரைப்படமான நேர்கொண்ட பார்வையின் மூலம் புகழ் பெற்ற அபிராமி, மீடு (#metoo) இயக்கத்தில் துஷ்பிரயோகம் நிகழும்போது மக்கள் பேச வேண்டும் என்றும் வெற்றிப் படியில் ஏறிய பிறகு இந்த ஹேஷ்டேக்கைத் தொடங்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
அவரது கருத்துகளுக்குப் பிறகு, பல ட்விட்டர் பயனர்கள் அவரது படம் நேர்கொண்ட பார்வையை சுட்டிக்காட்டினர், "அவர் இப்போது அனைவரையும் சங்கடப்படுத்துகிறாள். அவர் உண்மையில் பிங்க் திரைப்படத்தின் தமிழ் பதிப்பில் இருந்தார் என்ப நம்ப முடியவில்லை, இன்னும் கல்லூரி பெயரை அவதூறு ஆகுது என்று கூறி துன்புறுத்துபவர்களின் பக்கத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த வளாகத்தில் அவருக்கு பாலியல் குற்றச்சாட்டு நடக்கவில்லை என்பதற்காக அது அந்த வளாகத்தில் இருந்து யாருக்கும் நடக்கவில்லை என்று அர்த்தமல்ல. ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.
“அபிராமி வெங்கடாசலம்! அடுத்த முறை, உங்களுக்கான பொது அறிக்கைகளை உருவாக்க உதவுவதற்கு ஒரு பிஆர்ஓ-வை நியமிக்கவும். நீங்கள் வெளிப்படையாகப் பேசுவதை உறிஞ்சி, மிக ஆழமான புதைகுழியை நீங்களே தோண்டிக் கொண்டீர்கள். இதிலிருந்து வெளியேற பிஆர்ஓ உதவுவார். நீங்கள் நேர்கொண்ட பார்வை என்ற படத்தை ஒருவேளை பார்க்க வேண்டும்,” என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.
“அபிராமி வெட்கமின்றி துஷ்பிரயோகம் செய்பவர்களை தற்காத்துக் கொள்கிறார், நேர்கொண்ட பார்வையில் அவர் நடித்திருப்பது வேதனைக்கு உரியது என்று கூறியுள்ளார் மற்றொரு ட்விட்டர் பயனாளர். இதற்கிடையில், கலாக்ஷேத்ரா பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க நீதிபதி (ஓய்வு) கே கண்ணன், முன்னாள் தமிழக டிஜிபி லெட்டிகா சரண் மற்றும் டாக்டர் ஷோபா வர்தம் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட சுயாதீன குழுவை அமைத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.