Advertisment

பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் விபத்து : நடிகர் விஜய் ஆண்டனி படுகாயம்

பிச்சைக்காரன் திரைப்படம் விஜய் ஆண்டனியின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

author-image
WebDesk
New Update
பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் விபத்து : நடிகர் விஜய் ஆண்டனி படுகாயம்

விஜய் ஆன்டனி நடித்து இயக்கி வரும் பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த விபத்தில் விஜய் ஆன்டனி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

நான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி அதன்பிறகு, சலீம், இந்தியா பாகிஸ்தான் கொலைகாரன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்தார். இதில் சசி இயக்கத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் அவரின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது பிச்சைக்காரன் படத்தின் 2-ம் பாகத்தை விஜய் ஆன்டனியே நடித்து இயக்கி வருகிறார். இசையமைப்பாளர் நடிகர் என இருந்த விஜய் ஆன்டனி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள லங்கா தீவில் நடைபெற்று வந்த நிலையில், படபிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் விஜய் ஆன்டனி படுகாயமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் அவரை மீட்டு மறுத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Cinema Vijay Antony
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment