தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பெற்றிருப்பவர் எம்.ஜி.ஆர். 1917-ம் ஆண்டு இலங்கையில் பிறந்த இவர், 1936-ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் கேரக்டர் நடிகராக நடித்து பிறகு நாயகனாக உயர்ந்த எம்.ஜிஆர்.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக வளர்ந்தார்.
நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கம் தயாரிப்பு என பன்முக திறமைகளை வளர்த்துக்கொண்ட எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆரின் புகழ் காலத்தால் அழியாதது என்பதற்கு பல சான்றுகள் உள்ளது. இன்றைய அரசியல்வாதிகள் திரைத்துறையினர் கூட தங்களது மேடை பேச்சுகளில் எம்.ஜி.ஆர். பற்றி பேசாமல் இருந்ததில்லை என்று சொல்லலாம். இப்படி பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான எம்.ஜி.ஆர் பல போராட்டங்களுக்கு பிறகே நடிகராக மாறியுள்ளார்.
நாடகத்தில் நடித்து முடித்துவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னை வந்த எம்.ஜி.ஆர் பல இடங்களில் வாய்ப்பு தேடி அலைந்துள்ளார். ஆனால் அவர் சென்ற இடமெல்லாம் அவருக்கு இல்லை என்ற பதிலே கிடைத்துள்ளது. ஆனாலும் தனது முயற்சியை கைவிடாத எம்.ஜி.ஆர் தொடர்ந்து பல இடங்களில் தனக்கான வாய்ப்பை தேடி அலைந்துள்ளார்.
அப்படி ஒருநாள் கையில் 10 ரூபாய் வைத்துக்கொண்டு, சினிமா வாய்ப்பு தேடி புறப்ப்ட எம்.ஜி.ஆருக்கு வழங்கம்போல் ஏமாற்றமே கிடைத்துள்ளது. அப்போது தெருவில் சோகமாக வந்து கொண்டடிருந்த அவரிடம் ஒருவர் வந்து பேசுகிறார். தக்கலையில் இருந்து வருகிறேன் மதுரை பால வினோதா சபையில் உங்களுடன் நடித்திருக்கிறேன் என்று சொல்கிறார்.
அப்போது என்ன பண்ற என்று எம்.ஜி.ஆர் கேட்க சாப்பிட்டு 3 நாட்கள் ஆகிறது என்று சொல்கிறார். உடனடியாக தான் வைத்திருந்த 10 ரூபாயில் சாப்பாடு பஸ் செலவு போக மீதம் 7 ரூபாய் வைத்திருந்த எம்.ஜி.ஆர் அதில் 2 ரூபாயை அவருக்கு கொடுத்து உதவுகிறார். தனக்கு வேலை இல்லாத சமயத்திலும் தன்னுடன் நடித்த ஒருவருக்கு உதவி செய்த எம்.ஜி.ஆர் பின்னாளில் எப்படி இருந்தார் என்பது இந்த நாடே அறிந்த உண்மை. இந்த தகவலை ஒரு மேடை பேச்சில் நடிகர் சிவக்குமார் பகிர்ந்துகொண்டார்.
மேலும் 1935-ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி படத்தில் தான் எம்.ஜி.ர் நடிகராக அறிமுகமானார். இந்த படத்தில் கிட்டத்தட்ட 16 நாட்கள் வந்து வந்து பார்த்துவிட்டு சென்ற எம்.ஜி.ஆருக்கு 17-வது நாள் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போதும் சைக்கிள் இருந்தால் தான் நடிக்க முடியும் என்ற நிலையில், அவருக்கு சைக்கிள் கொடுத்து உதவியவர் கிருஷ்ணன் பஞ்சு என்ற பிரபல இயக்குனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil