/indian-express-tamil/media/media_files/2025/09/12/arjun-das-2025-09-12-13-25-38.jpg)
அஜித் சிங்கிள் தான், ஆனா நான் டூயல் ரோல்; என்னை ரொஃபர் பண்ணதே அவர் தான்; அர்ஜுன் தாஸ் ஜாலி பேச்சு!
தமிழ் திரையுலகில் முன்னணி வில்லன் நடிகராக வலம் வருபவர் அர்ஜுன் தாஸ். இவர் ‘பெருமான்’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து, ‘ஆக்ஸிஜன்’ ‘அநீதி’, ‘கைதி’, ’மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘ரசவாதி’ போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் வில்லன் கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, அர்ஜுன் தாஸிற்கு பட வாய்ப்புகளும் குவிய ஆரம்பித்தது.
அர்ஜுன் தாஸின் குரலுக்கு இங்கு பல பெண்களும் அடிமையாக உள்ளனர். ரசிகைகள் பலரும் அவரது குரல் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று பல நேர்காணல்களில் கூறியுள்ளனர். நடிகர் அர்ஜுன் தாஸ் தற்போது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இயக்கத்தில் வெளியாகியுள்ள பாம் (BOMB) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தில், ஷிவாத்மிகா ராஜசேகர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, பூவையார், சில்வென்ஸ்டன் ஆகியோர் முக்கிய துணை வேடங்களில் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை பிரசன்னா செய்துள்ளார். ‘பாம்’ திரைப்படம் இன்று (செப்டம்பர் 12) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் குறித்து நடிகர் அர்ஜுன் தாஸ் கூறிய வீடியோ இணையத்தில் வரைலாகி வருகிறது. அதில், “குட் பேட் அக்லி திரைப்படத்தில் எனக்கு பதிலாக யாரை வேண்டுமானாலும் நடிக்க வைத்திருக்கலாம். ஆனால், அஜித் சார் என்னை நடிக்க வைக்குமாறு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் கூறினார். அவரும் அதற்கு சரி என்று சொல்லியதுடன் என்னிடம் வைத்து ஓபனிங் சீன் இப்படிதான் இருக்கும் என்று விளக்கினார். அந்த படத்தில் எனக்கு நிறைய ஸ்பேஸ் இருந்தது. அஜித் சாருக்கு பெரிய மனசு உள்ளது ” என்றார்.
#சுதிர் : பொதுவாக நமக்கு கீழே இருக்கவங்கள கீழே வைச்சு இருக்கனும் தான் பெரும்பாலும் நினைப்பாங்கல@iam_arjundas : அந்த விஷயத்துல அஜித் சார் ரொம்ப பெரிய மனசு அவர் என்க்கு #GBU படத்துல வாய்ப்பு கொடுத்து லைப் கொடுத்தார் அஜித் சார் great 🙏🙏#AjithKumar
— Joe Selva (@joe_selva1) September 12, 2025
pic.twitter.com/V32cAlHiPs
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.