Advertisment

பிரபல நடிகருடன் மகள் காதல்... காமெடி நடிகருக்கு சம்மந்தியாக நடிகர் அர்ஜூன்?

அர்ஜூன் தயாரித்து இயக்கிய சொல்லிவிடவா படத்தில் நடித்த ஐஸ்வர்யா தற்போது மீண்டும் தனது அப்பா அர்ஜூன் இயக்கத்தில் தமிழ்/தெலுங்கு இருமொழி படத்தில் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Arjun

குடும்பத்துடன் நடிகர் அர்ஜூன்

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் மகள் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரின் மகனுடன் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக இருந்த அர்ஜுன் தற்போது தென் மொழிப் படங்களில் முக்கிய கேரக்டர்களில் பிஸியாக நடித்து வருகிறார். 1988 இல் முன்னாள் நடிகை நிவேதிதா என்பரை திருமணம் செய்துகொண்ட அர்ஜூனுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த ஐஸ்வர்யா, விஷாலின் 'பட்டத்து யானை' படத்தில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து அர்ஜூன் தயாரித்து இயக்கிய சொல்லிவிடவா படத்தில் நடித்த ஐஸ்வர்யா தற்போது மீண்டும் தனது அப்பா அர்ஜூன் இயக்கத்தில் தமிழ்/தெலுங்கு இருமொழி படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே ஐஸ்வர்யா அர்ஜூன், தேசிய விருது பெற்ற நடிகரும் இயக்குனருமான தம்பி ராமையாவின் மகனான நடிகர் உமாபதி ராமையாவுடன் நீண்ட நாட்களாக காதலில் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிவந்து விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் 'லியோ' படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் அர்ஜுன், பல படங்களில் பிஸியாக நடித்து வரும் தம்பி ராமையா இருவரும் இணைந்து திருமண தேதியை விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'அதாகப்பட்டது மகாஜனங்களே' படத்தின் மூலம் அறிமுகமான உமாபதி, 'மணியர் குடும்பம்', 'திருமணம்', 'தண்ணி வண்டி' ஆகிய படங்களில் வேடங்களில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா நடிப்பில் உருவாகி வரும் ‘ராஜா கிளி’ படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். அதேபோல் அர்ஜூன் தொகுத்து வழங்கிய ஜீ தமிழின் சர்வைவர் நிகழ்ச்சியில் உமாபதி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

அர்ஜூன தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியின் பங்கேற்ற உமாபதிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அதனைத் தொடர்ந்து அர்ஜூன் கட்டிய ஆஞ்சிநேயர் கோவிலில் தம்பி ராமையா - அர்ஜூன் குடும்பத்தினர் சந்தித்து திருமணம் குறித்து பேசியுள்ளனர்.

இந்த திருமணம் குறித்து தேதி இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த முடிவு செய்துள்ளதாகவும், உமாபதியின் பிறந்த நாளான நவம்பர் 8-ந் தேதி இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று நடிகர் தம்பி ராமையா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Arjun Sarja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment