/tamil-ie/media/media_files/uploads/2018/11/actor-arjun-me-too-case.jpg)
actor arjun me too case, நடிகர் அர்ஜுன்
அம்ரிதா தத்தா
சினிமா துறையில் அதிகரித்து காணப்படும் மி டூ புகார்களில் ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி குற்றச்சாட்டு தெரிவித்தார். அதில், அர்ஜுனின் மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
கன்னடத்தில் பிரபல நடிகையான ஸ்ருதி ஹரிஹரன், ‘ஆக்ஷன் கிங்’ என ரசிகர்கள் அழைக்கும் அர்ஜூன் மீது பாலியல் குற்றச்சாட்டினை முன்வைத்தார். நடிகர் அர்ஜூன் உடன் ‘விஸ்மயா’ என்னும் திரைப்படத்தில் நடித்தப்போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்தார்.
நடிகர் அர்ஜுன் மீ டு புகார்
அதைத் தொடர்ந்து தனது பெயருக்கும், புகழுக்கும் கலங்கம் விளைவிக்கும் விதமாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்திய நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். நடிகர் அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட விவகாரத்தில் அவர் மீதான குற்றச்சாட்டில் தான் உறுதியாக இருப்பதாகவும், சட்டப்படி போராடத் தயார் என்றும் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து, பெங்களூரு கப்பன் பார்க் காவல் நிலையத்தில் அர்ஜுன் மீது 354ஏ, 509, 506, 354, உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் பொய் என்றும் அதன் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அர்ஜுன் சார்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை இன்று வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us