Advertisment

சன் டிவி சீரியலை விட்டு திடீரென விலகிய பிரபலம்: இது சரியான முடிவா?

Sun TV actor arun quit from poove unakkaga serial: நடிகர் அருண் சீரியலுக்கு முன் சில விளம்பரப்படங்களில் நடித்துள்ளார். பூவே உனக்காக சீரியல் தான் அவருக்கு முதல் சீரியல். பூவே உனக்காக சீரியலில் நடித்ததன் மூலம் அருணுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் அருண் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
சன் டிவி சீரியலை விட்டு திடீரென விலகிய பிரபலம்: இது சரியான முடிவா?

சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பூவே உனக்காக. இந்த சீரியலில் ராதிகா ப்ரீத்தி, ஸ்ரீனிஷ் அரவிந்த் மற்றும் அருண் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண் சீரியலை விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் அருண் சீரியலுக்கு முன் சில விளம்பரப்படங்களில் நடித்துள்ளார். பூவே உனக்காக சீரியல் தான் அவருக்கு முதல் சீரியல். பூவே உனக்காக சீரியலில் நடித்ததன் மூலம் அருணுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் அருண் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அருண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”நான் பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகுகிறேன். இனிமேல் நீங்கள் என்னை கதிராக பார்க்க முடியாது. எனக்கு இந்த வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் சன் டிவிக்கு என்னுடைய நன்றி. உங்களுடைய ஆதரவு இல்லை என்றால் நான் இன்றைக்கு இந்த நிலையில் இல்லை. எனக்கு எப்பொழுதுமே அன்பையும் ஆதரவையும் அளிக்கும் என்னுடைய ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கும் நன்றி. கவலைப் படாதீர்கள், கூடிய விரைவில் நல்ல செய்தியை உங்களுக்கு தெரிவிப்பேன். எனக்கு அன்பையும் ஆதரவையும் அளிக்கும் எல்லோருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி,”  என பதிவிட்டுள்ளார்.

இதற்கு சீரியலில் கூட நடிக்கும் ராதிகா ப்ரீத்தி வெரி ஷாக்கிங் என பதிவிட்டுள்ளார்.

இந்த சீரியலில் கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஜோவிதா சில மாதங்களுக்கு முன்னர் சீரியலில் இருந்து விலகியுள்ள நிலையில் தற்போது அருணும் விலகியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sun Tv Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment