Advertisment
Presenting Partner
Desktop GIF

'கனத்த இதயத்துடனும், இயக்குனர் பாலா சார் அவர்களுக்கு'... வைரலாகும் அருண் விஜய் பதிவு

"எனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை." என்று நடிகர் அருண் விஜய் கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actor arun vijay about vanangan director bala tamil cinema news

இயக்குநர் பாலாவுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் அருண் விஜய்,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் இயக்குநர் பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், இயக்குநர் பாலாவுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் அருண் விஜய்

Advertisment

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும், என் இயக்குனர் பாலா சார் அவர்களுக்கு, நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, ஒரு நடிகனாக 'எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா' என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற 'வணங்கான்' படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

நம் படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை. ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில்,  என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை.என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன்.

எனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை. இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பக்க பலமாக இருந்து கொண்டிருக்கும், சுரேஷ் காமாட்சிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.மக்கள் அனைவரும் இப்படத்தை விரைவில் திரையில் காணும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும்.” என நடிகர் அருண் விஜய் பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Entertainment News Tamil Arun Vijay Bala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment