கோயம்புத்தூர் செண்டிமெண்ட்... 'மிஷன் சாப்டர் -1' பட ப்ரோமோஷனில் நெகிழ்ச்சி

தான் நடித்த எந்த ஒரு புதிய படமும் வெளியாவதற்கு முன்பு கோவையில் தன்னுடைய சந்திப்பை மேற்கொள்வது செண்டிமெண்டாக கருதுவதாக நடிகர் அருண் விஜய் நெகிழ்ந்து பேசினார்.

தான் நடித்த எந்த ஒரு புதிய படமும் வெளியாவதற்கு முன்பு கோவையில் தன்னுடைய சந்திப்பை மேற்கொள்வது செண்டிமெண்டாக கருதுவதாக நடிகர் அருண் விஜய் நெகிழ்ந்து பேசினார்.

author-image
WebDesk
New Update
Actor Arun Vijay Coimbatore  press for Mission Chapter 1  movie promotion Tamil News

கோவையில் "மிஷன் சாப்டர் 1" திரைப்பட குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பு.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Arun Vijay | Coimbatore: லைகா புரொடக்‌ஷன்ஸ் ஸ்ரீ ஷீரடி சாய் மூவிஸ் நியூ மார்ச் ஃபாஸ்ட் பிக்சர்ஸ் மற்றும் ஆஸ்பென் ஃபிலிம் புரொடக்‌ஷன் தயாரித்து, இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், இயல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள மிஷன் சாப்டர் 1 திரைப்படம் இன்று முதல் வெளியாகிறது. 

Advertisment

இந்நிலையில், இந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காக நேற்று கோவை சென்ற நடிகர் அருண் விஜய், நடிகை எமி ஜாக்சன் மற்றும் இயக்குனர் ஏ.எல்.விஜய் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய அருண் விஜய், தான் நடித்துள்ள படங்களில் இந்த படம் சென்டிமென்ட், ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 

முதல்முறையாக ஏ.எல்.விஜய்யுடன் இப்படத்தின் மூலம் நான் இணைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர்  தன்னுடைய கேரியரில் இது மிகப்பெரிய பட்ஜெட் படம் எனவும், இந்த படம் நிச்சயம் தியேட்டரில் ரசிகர்களுக்கு விஷூவல் ட்ரீட் ஆக அமையும் என்றும் தெரிவித்தார்.

Advertisment
Advertisements

தொடர்ந்து பேசிய இயக்குனர் விஜய் இந்த படத்தின் கதையில்  கோவைக்கும் தொடர்பு இருப்பதாக கூறிய அவர் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக கோவை திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய நடிகை எமி.ஜாக்சன் தமிழ் படங்களில் நடிப்பதில் ஆரம்பத்தில் இருந்தே தாம் ஆர்வமுடன் நடித்து வருவதாகவும் தமிழ் மொழிபடங்களில் நடிப்பதில் மொழியை புரிந்து கொள்வதில் தமக்கு எந்தவித சிரமும் இல்லை என்றும் கூறினார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Coimbatore Arun Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: