‘தலை தப்பியது’ கடவுளுக்கு நன்றி சொன்ன அருண் விஜய்

உடற்பயிற்சி செய்யும்போது தவறி விழுந்த நடிகர் அருண் விஜய், நல்ல வேலையாக தலையில் எந்த காயமும் படவில்லை, கடவுளுக்கு என்று நன்றி என்று கூறியதால் அவருடைய ரசிகர்கள் அவரை நலன் விசாரித்து வருகின்றனர்.

By: May 16, 2020, 8:57:32 PM

உடற்பயிற்சி செய்யும்போது தவறி விழுந்த நடிகர் அருண் விஜய், நல்ல வேலையாக தலையில் எந்த காயமும் படவில்லை, கடவுளுக்கு என்று நன்றி என்று கூறியதால் அவருடைய ரசிகர்கள் அவரை நலன் விசாரித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா உலகில் போராடி தனக்கான இடத்தை பிடித்த நடிகர்களில் ஒருவர் நடிகர் அருண் விஜய். நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய், சினிமா துறையில் எளிதாக நுழைந்துவிட்டாலும் தனக்கான ஒரு இடத்தைப் பிடிப்பதற்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.

அருண் விஜய் இதற்கு முன்பு பல படங்கள் நடித்திருந்தாலும், அவர் நடிகர் அஜித் உடன் இணைந்து வில்லனாக நடித்த பிறகுதான் அவருக்கு ஒரு திருப்புமுனை ஏற்பட்டது என்று கூறலாம். அதற்குப் பிறகு, அருண் விஜய் தனியாக நடித்த எல்லா படங்களுமே வெற்றி படங்கள்தான். குற்றம் 22, தடம், மாஃபியா என தொடர்ந்து 3 வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

அருண் விஜய், கார்த்திக் நரேன் இயக்கத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்த மாஃபியா சாப்டர் 1 படம் பொது முடக்கத்துக்கு முன்பு வெற்றி பெற்ற படங்களில் ஒன்று.

தற்போது நடிகர்கள் எல்லாம் கொரோனா பொது முடக்க காலத்தில் வீடுகளில் முடங்கி உள்ளனர். பல நடிகர்கள், தாங்கள் உடற்பயிற்சி செய்வதை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். சிலர் சேலஞ்களையும் விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், அருண் விஜய் உடற்பயிற்சி செய்யும்போது தவறி விழுந்ததால் இரண்டு முட்டிகளிலும் அடிபட்டதாக தெரிவித்துள்ளார். நல்ல வேளையாக தலையில் எதுவும் அடிபடவில்லை கடவுளுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.


இது குறித்து அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில், ஓரு வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும், “நீங்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு உங்கள் மெஷினை சோதனை செய்யுங்கள். இது போல செய்து விழுந்துவிடாதீர்கள். இரண்டு முட்டிகளிலும் அடிபட்டு ஒருவாரம் ஆகிவிட்டது. தலையில் எதுவும் காயம் படவில்லை. கடவுளுக்கு நன்றி. பாடம் கற்றுக்கொண்டேன். பயிற்சியாளர், மேற்பார்வையாளர் இல்லாமல் மெஷின்களில் உடற்பயிற்சி செய்யாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் அருண் விஜய் உடற்பயிற்சி செய்யும்போது விழுந்ததையும் அடிபடமால் தலை தப்பியது என்று தெரிவித்ததால் ரசிகர்கள் அவரை நலம் விசாரித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Actor arun vijay fallen while work out video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X