நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை சோஷியல் மீடியா மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் அவர் எழுதிய பதிவில், “எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கவே இது. நான் தற்போது வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளேன் மற்றும் எனது மருத்துவரின் ஆலோசனையின்படி அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுகிறேன். அனைவரின் அன்பிற்கும் நன்றி.. பாதுகாப்பாக இருங்கள் மற்றும் அனைவரையும் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
சமீபத்தில் வைரஸால் பாதிக்கப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் அருண் இணைந்துள்ளார்.
முன்னதாக, நகைச்சுவை நடிகர் வடிவேலு, தனது வரவிருக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின், முன் தயாரிப்புப் பணிகளில் கலந்து கொண்டு, லண்டனில் இருந்து சென்னை திரும்பிய பிறகு கொரோனா பரிசோதனை செய்தார். வீடு திரும்பிய அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கு முன், கமல்ஹாசனும் அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய போது அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கமல், வடிவேலு இருவரும் பூரண குணமடைந்தனர். சமீபத்தில் தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சுவுக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நாட்டில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்குதலின் மூன்றாவது அலை தொடங்கும் என்ற அச்சத்தின் காரணமாக, பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.
புதன்கிழமை, தமிழக அரசு இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை அறிவித்தது. திரையரங்குகள் 50 சதவீதத்துடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
அருண்விஜய் தற்போது யானை மற்றும் பாக்ஸர் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“