ஒரு வழியாக உறுதியானது ஆர்யா திருமணம்... இந்த தேதியில் தான் நடக்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actor arya marriage, நடிகர் ஆர்யா

actor arya marriage, நடிகர் ஆர்யா

நடிகர் ஆர்யா பிரபல நடிகை ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ் திரையுலகில் இளம் நடிகர்களில் ஒருவராகிய ஆர்யாவுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி கடந்த சில ஆண்டுகளாகவே வெளிவந்தது. இதற்காக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தியும் அதிலும் பெண் அமையவில்லை.

நடிகர் ஆர்யா திருமணம்

இந்த நிலையில் நடிகை சாயிஷாவை ஆர்யா திருமணம் செய்யவுள்ளதாக அவ்வப்போது வதந்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த வதந்தி உண்மையாகியுள்ளது. இருவரும் இணைந்து 'கஜினிகாந்த்' திரைப்படத்தில் நடித்தபோது காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

ஆர்யா, சாயிஷா திருமணம் குறித்து இருவீட்டார்களும் பேசி முடிவெடுத்துள்ளதாகவும், வரும் மார்ச் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்கள் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இந்த திருமணத்திற்கு தமிழ் திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்து தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sayeesha Arya

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: