காத்திருந்து காதலர் தினத்தில் உண்மையை உடைத்த ஆர்யா... அவரே சொல்லிட்டாரு

Tamil Actor Arya Confirms Marriage with Sayyeshaa : பிரபல நடிகை சாயிஷாவை திருமணம் செய்வதாக வந்த செய்தியை உண்மை என நடிகர் ஆர்யா...

Arya Announces Marriage Confirmation with Sayyeshaa Saigal: பிரபல நடிகை சாயிஷாவை திருமணம் செய்வது குறித்து வந்த தகவல் உண்மை தான் என்று காதலர் தினத்தில் உறுதி செய்திருக்கிறார் நடிகர் ஆர்யா.

தமிழ் திரையுலகில் இளம் நடிகர்களில் ஒருவரான ஆர்யாவுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி கடந்த சில ஆண்டுகளாகவே வெளிவந்தது. இதற்காக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தியும் அதிலும் பெண் அமையவில்லை.

நடிகர் ஆர்யா திருமணம்

இந்த நிலையில் நடிகை சாயிஷாவை ஆர்யா திருமணம் செய்யவுள்ளதாக அவ்வப்போது வதந்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த வதந்தி உண்மையாகியுள்ளது. இருவரும் இணைந்து ‘கஜினிகாந்த்’ திரைப்படத்தில் நடித்தபோது காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ஆர்யா, சாயிஷா திருமணம் குறித்து இருவீட்டார்களும் பேசி முடிவெடுத்துள்ளதாகவும், வரும் மார்ச் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்கள் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெறும் என்றும் தகவல்கள் வேகமாக பரவியது.

இந்த தகவலை தற்போது, ஆர்யாவே தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அதில், “வரும் மார்ச் மாதம் இருவரின் திருமணமும் நடக்க இருக்கிறது” என்று அவர் உறுதிபடுத்தியுள்ளார்.

காதலர் தினமான இன்று அவர் இந்த தகவலை உறுதி செய்திருப்பது அவரின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close