டெடி மற்றும் சர்பட்டா பரம்பரை படத்தை தொடர்ந்து ஆர்யா நடித்துள்ள படம் கேப்டன். டெடி படத்தின் இயக்குநர் சக்தி சௌந்திராஜன் இயக்கியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 8-ந் தேதி வெளியாக உள்ளது. தமிழில் வெளியாகும் முதல் ஏலியன் கதையம்சம் கொண்ட படம் என்பது இந்த படத்தின் டிரெய்லர் மூலம் தெரியவந்துள்ளது.
Advertisment
இதனால் படத்திற்காக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில்,படத்திற்கான ப்ரமோஷன் நிகழச்சிகளில் நடிகர் ஆர்யா தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதே சமயம் கடந்த 2013-ம் ஆண்டு ஆர்யா நயன்தாரா நடிப்பில் வெளியாக ராஜா ராணி படத்திற்கு தமிழக அரசின் திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆர்யா இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார்.
இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்யா கூறுகையில்,
Advertisment
Advertisements
ராஜா ராணி திரைப்படத்திற்கு தமிழ்நாடு அரசு விருது கொடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது வரும் 8"ம்"தேதி வெளியாகி வரும் கேப்டன் திரைப்படத்தின் கரு வித்தியாசமான ஆர்மி பேக் கிரவுண்ட் கதையாக இருக்கும். இத்திரைப்படம் ஹாலிவுட் படம் போல் இருக்கும். நல்ல கதை கொண்ட படங்களை தான் பொதுமக்கள் விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் நடிகர் விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் மூலமாக பாராட்டு விழா நடத்துவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஆர்யா கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இந்திய ராணுவ வீரர்களுக்கு பேரும் புகழும் கிடைப்பதில்லை. ஆனால் நடிகர்களுக்கு கிடைக்கிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்திய ராணுவ வீரர்கள் வாழ்க்கையை கொடுக்கிறார்கள் எதையும் அவர்கள் பெரிதாக எண்ணுவதில்லை என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“