Advertisment

நல்லிணக்கம் இல்லாத சூழல் உருவாகி வரும் நேரத்தில் இதுபோன்ற வசனங்கள் தேவை; கோவையில் நடிகர் ஆர்யா பேட்டி

பான் இந்தியா என்பது சப்ஜெக்ட் தான். கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அது பான் இந்தியா படமா என முடிவு செய்யபடுகிறது; கோவையில் நடிகர் ஆர்யா பேச்சு

author-image
WebDesk
New Update
arya siddhi

நடிகர்கள் ஆர்யா மற்றும் சித்தி இட்னானி கோவையில் பேட்டி அளித்தப்போது

நல்லிணக்கம் இல்லாத சூழல் உருவாகி வரும் சமயத்தில் இதுபோன்ற வசனங்கள் தேவை என தான் நினைப்பதாகவும், ”அல்லாஹ்வும் ஐய்யனாரும் ஒன்னு அதை அறியாதவர்கள் வாயில் மண்ணு" என்ற வசனம் படத்தில் வைத்ததற்கான காட்சிகள் இருக்கும் என்றும் நடிகர் ஆர்யா கோவையில் தெரிவித்துள்ளார்

Advertisment

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள "காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்" திரைப்படத்தின் நடிகர்களான ஆர்யா மற்றும் சித்தி இட்னானி ஆகியோர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் செய்தியாளர்களிடம் பேசினர்.

இதையும் படியுங்கள்: தங்க மோதிரம் கொடுத்த ஹீரோ: செம்ம சந்தோஷத்தில் ராதிகா!

அப்போது பேசிய ஆர்யா, மண், நன்றி, குடும்பம் என பல்வேறு விஷயங்களை முத்தையா அவர் பாணியில் கூறியிருக்கிறார். இது ஒரு கமர்சியல் பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படம், என்று கூறினார்.

படத்தில் வைக்கபட்டுளள "அல்லாஹ்வும் ஐய்யனாரும் ஒன்னு அதை அறியாதவர்கள் வாயில் மண்ணு" என்ற வசனம் தொடர்பான கேள்விக்கு, நல்லிணக்கம் இல்லாத சூழல் உருவாகி வருவதாகவும், அதுபோன்ற சமயத்தில் இதுபோன்ற வசனங்கள் தேவை என தான் நினைப்பதாகவும், படத்தில் அந்த வசனம் வைத்ததற்கான காட்சிகள் இருக்கும் எனவும் ஆர்யா தெரிவித்தார்.

இந்த படத்தில் இடம்பெறும் ரஜினிகாந்த் தொடர்பான போஸ்டர் மற்றும் பாட்டு ஆகியவை உற்சாகத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கும் அதற்கும் தொடர்பு இல்லை. எனக்கு கிராமத்தில் ஆக்சன் போன்ற திரைபடம் நடிக்க வேண்டும் என நீண்ட நாள் ஆசை உண்டு. இயக்குநர் முத்தையாவிடம் நான் கேட்டு கொண்டதால் தான் இந்த கதை தனக்காக உருவாக்கப்பட்டது என்று ஆர்யா தெரிவித்தார்.

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷின் இசை இந்த படத்துக்கு பக்கபலமாக அமைந்துள்ளதாக குறிப்பிட்ட ஆர்யா, ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

கிராமத்து படங்களில் நடிக்காதது பான் இந்தியா படம் இல்லை என்பதற்காக இல்லை, காந்தாரா படம் கூட கிராமத்தில் தான் எடுத்தார்கள். பான் இந்தியா என்பது சப்ஜெக்ட் தான். திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகும் போது பல மொழிகளில் மொழிபெயர்க்கிறார்கள், அப்போது அதில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அது பான் இந்தியா படமா என முடிவு செய்யபடுகிறது.

publive-image

அடுத்து எப்.ஐ.ஆர் திரைப்படத்தின் இயக்குனரிடம் மிஸ்டர் எக்ஸ் என்ற திரைப்படம் நடித்துக் கொண்டிருப்பதாகவும், சார்பட்டா 2 திரைப்படத்திற்கான கதை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் இந்த ஆண்டு இறுதியில் படபிடிப்பு துவங்கும் எனவும் ஆர்யா தெரிவித்தார்.

மேலும் இன்றைய ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் சி.எஸ்.கே அணிதான் வெற்றி பெறும் என்றும் நடிகர் ஆர்யா தெரிவித்தார்

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய நடிகை சித்தி இட்னானி, இந்த திரைப்படத்தில், தமிழ்ச்செல்வி என்ற கனமான, முக்கியாமன கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், சிம்பு, ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தது பெருமைக்குரியது எனவும் தெரிவித்தார்.பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Arya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment