Advertisment

ஆர்யாவின் 'கஜினிகாந்த்' பட ரிலீஸ் தேதியில் மாற்றம்!

கஜினிகாந்த் ரிலீஸ் தேதியில் மாற்றம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆர்யாவின் 'கஜினிகாந்த்' பட ரிலீஸ் தேதியில் மாற்றம்!

ஆர்யா, சயிஷா சைகல், கருணாகரன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கஜினிகாந்த்’. சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியிருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.  'ஹரஹர ஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டுக்குத்து' படங்களைத் தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

Advertisment

காமெடி கலந்த குடும்பப் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு பாலமுரளிபாலு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்தனர். இதையடுத்து, ஜூலை 27ம் தேதி படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது சில காரணங்களால் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 3ம் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் சந்தோஷ் - ஆர்யா இணைந்து படம் பண்ண முடிவு செய்திருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனமே தயாரிக்கிறது. ‘கஜினிகாந்த்’ படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களே இதிலும் பணிபுரிவார்கள் என தெரிகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

Sayeesha Santhosh P Jayakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment