60-வயதில் 2-வது திருமணம் செய்த நடிகர் ஆஷித் வித்யார்த்தியின் முதல் மனைவி யார் என்பது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
1991-ம் ஆண்டு இந்தியில் வெளியான கால் சத்யா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஆஷித் வித்யார்த்தி. அதனைத் தொடர்ந்து தெலுங்கு கன்னடா பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்த இவர், விக்ரம் நடிப்பில் வெளியான தில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் டிஎஸ்பி ஷங்கர் கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்த ஆஷிஷ் வித்யார்த்திக்கு அதன்பிறகு தமிழில் பல வாய்ப்புகள் கிடைத்தது.
இதில் ரஜினியுடன் பாபா, அர்ஜூனுடன் ஏழுமலை, விஜயுடன் பகவதி, தமிழன், உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக முத்திரை பதித்த இவர், விஜய்-க்கு அப்பாவாக கில்லி படத்தில் நடித்திருந்தார். போலீசாக இருந்தாலும் இவர் கோபமாக பேசும் வசங்கள் இந்த படத்தில் காமெடிக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. அதன்பிறகு வில்லன் குணச்சித்திரம் என மாறி மாறி நடித்து வந்தார்.
கடைசியாக தமிழில் என்வழி தனிவழி படத்தில் நடித்திருந்த ஆஷிஷ் வித்யார்த்தி தற்போது இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது 60-வயதை கடந்துள்ள ஆஷிஷ் வித்யார்த்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு 2-வது திருமணம் செய்துகொண்ட நிலையில், அவரின் முதல் மனைவி தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஷிஷ் வித்யார்த்தி ராஜேஷி என்பவரை முதலில் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில், தற்போது கொல்கத்தாவை சேர்ந்த பேஷன் ஆன்ருபெரரான ரூபாலி பாருவா என்பரை திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், ஆடம்பரம் இல்லாமல் இவர்களின் திருமணம் ரஜிஸ்டர் ஆபீஸில் நடந்துள்ளது.
தனது யூடியூப் சேனல் பிளாக்ஸ்காக அடிக்கடி கொல்கத்தா சென்று வந்த ஆஷித் வித்யார்த்திக்கு ரூபாலியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. அதன்பிறகு இருவரும் திருணம் செய்துகொண்டுள்ளனர். அதே சமயம் ஆஷித் வித்யார்த்திக்கும் அவரது முதல் மனைவிக்கும் என்ன பிரச்னை என்பது இதுவரை வெளிவராத தகவலாக உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் தான் அவர்கள் பிரிந்ததாக கூறப்படுகிறது. தற்போது ஆஷிஷின் 2-வது திருமணம் குறித்து ராஜேஷி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், நமக்கு ஏற்ற சரியான நபர் எப்போதுமே நீ யார் எனக்கு என்ற கேள்வியை கேட்டமாட்டார்கள். அதேபோல் எந்த விஷயம் உங்களை ஹார்ட் பண்ணுமே அதே விஷயத்தை மறுபடியும் சொல்லி உங்களை ஹார்ட் பண்ண மாட்டாங்க. நீங்கள் எந்த விஷயத்தை நினைத்து ஓவர் திங்கிங் அல்லது அவர் மைண்டை கம்பியூஷ் பண்ணீங்களே அதே விஷயம் இப்போது நடந்திருக்கு. இதுக்கப்புறம் உங்க வாழ்க்கையில் ஒரு தெளிவு கிடைக்கிசிருக்கு.
இதன்பிறகு உங்கள் வாழ்கையில் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழுங்கள். இதுக்கு முன்னாடி இருந்ததை விட இன்னும் வலிமையாக மாறுங்கள். இனிமேல் ஆசீர்வாதம் மட்டுமே உங்கள் வாழ்க்கையில் கிடைக்க போகிறது என்று தனக்கு தானே அறிவுரை சொல்லும் வகையிலான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
இந்தி திரையுலகில் சினிமா மற்றும் சீரியல்களில் நடித்துள்ள ராஜேஷி வித்யார்த்தி த்ரிஷ்யம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இந்தியில் இயக்கிய தி பாடி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் பல தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”