Advertisment

60-வயதில் 2-வது திருமணம்... மனைவியுடன் குத்தாட்டம் போட்ட ஆஷிஷ் வித்யார்த்தி

ஆஷிஷ் தனது 2-வது மனைவி ரூபாலி பாருவாவுடன் குத்தாட்டம் போட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ashishi Vidyarthi

Ashishi Vidyarthi

நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி 60-வயதில் 2-வது திருமணம் செய்த செய்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், தற்போது அவரின் திருமண புகைப்படங்கள் வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

விக்ரம் நடிப்பில் வெளியான தில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஆஷிஷ் வித்யார்த்தி. இந்த படத்தில் டிஎஸ்பி ஷங்கர் கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்த ஆஷிஷ் வித்யார்த்திக்கு அதன்பிறகு ரஜினியுடன் பாபா, அர்ஜூனுடன் ஏழுமலை, விஜயுடன் பகவதி, தமிழன், உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக முத்திரை பதித்த இவர், விஜய்-க்கு அப்பாவாக கில்லி படத்தில் நடித்திருந்தார்.

போலீசாக இருந்தாலும் இவர் கோபமாக பேசும் வசங்கள் இந்த படத்தில் காமெடிக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. அதன்பிறகு வில்லன் குணச்சித்திரம் என மாறி மாறி நடித்து வந்தார்.  கடைசியாக தமிழில் என்வழி தனிவழி படத்தில் நடித்திருந்த ஆஷிஷ் வித்யார்த்தி தற்போது இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது 60-வயதை கடந்துள்ள ஆஷிஷ் வித்யார்த்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு 2-வது திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த திருமணம் தொடர்பான தகவல்கள் இணைத்தில் வைரலாக பரவிய நிலையில், அவரின் முதல் மனைவியும், இந்தி சினிமாவின் குணச்சித்திர நடிகையுமாக ராஜேஷி வித்யார்த்தி வெளிட்டிருந்த பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்த்து.

இதனிடையே தற்போது ஆஷிஷ் வித்யார்த்தி 2-வது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஆஷிஷ் தனது 2-வது மனைவி ரூபாலி பாருவாவுடன் குத்தாட்டம் போட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்த திருமணத்தில் ஆஷிஷ் – ரூபாலி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கவனம் பெற்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment