Advertisment
Presenting Partner
Desktop GIF

தன் மீது அவதூறு, மகளுக்கு உணர்ச்சி ரீதியான பாதிப்பு: முன்னாள் மனைவி புகாரால் நடிகர் பாலா கைது!

தன்னை அவமதித்ததாகவும், இந்த வீடியோக்கள் தங்கள் மகளுக்கு உணர்ச்சிகரமான பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் முன்னாள் மனைவி அளித்த புகாரில் நடிகர் பாலா கைது செய்யப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Actor Bala Arrest

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் பாலாவின் முன்னாள் மனைவி அம்ரிதா சுரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழில் கார்த்தி நடிப்பில், வெளியான சிறுத்தை, அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், ரஜினிகாந்தின் அண்ணாத்த உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் சிறுத்தை சிவா. இவரின் சகோதரர் பாலா. தமிழில், 2003-ம் ஆண்டு வெளியான அன்பு என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், அடுத்து மஞ்சள் வெயில் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.

Read In English: Actor Bala arrested on charges of outraging woman’s modesty following ex-wife’s complaint

தமிழில் இவருக்கு படங்கள் வெற்றியை கொடுக்காத நிலையில், மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கினார். அங்கு பெரிய வெற்றிப்படங்களை கொடுத்த இவர், பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அஜித்தின் வீரம், மற்றும் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் நடிபர் பாலா. கடைசியான மலையாளத்தில் இவர் நடித்த பேட் பாய்ஸ் படம் கடந்த மாதம் வெளியானது.

தனிப்பட்ட வாழ்க்கையில், முதலில், பாடகியும் இசையமைப்பாளருமான அம்ரிதா சுரேஷ் என்பவரை கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட பாலா, கருத்து வேறுபாடு காரணமாக 2019-ம் ஆண்டு அவரை பிரிந்தார். அதன்பிறகு, 2021-ம் ஆண்டு எலிசபெத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது தனியாக வாழ்ந்து வரும் அம்ரிதா சுரேஷ் தன் மீதும் தனது மகள் மீதும் பாலா அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாக எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின்பேரில், பெண்ணை அவமதித்தல் மற்றும் குழந்தைகளை கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பாலாவை கைது செய்தனர். அவருடன் அவரது மேலாளர் ராஜேஷுடன் கைது செய்யப்பட்டார். போலீசார் அவர்களை இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வழக்கை முழுவதுமாக ரத்து செய்ய கோரி பாலா கேரள உயர் நீதிமன்றத்தை அணுக திட்டமிட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் பாத்திமா சித்திக் தெரிவித்தார்.

அமிர்தா, தனது புகாரில், பாலா தன்னை சமூக ஊடகங்கள் மூலம் அவமதித்ததாகவும், பாலா பேசிய வீடியோக்கள் தங்கள் மகளுக்கு உணர்ச்சிகரமான பாதிப்பை ஏற்படுத்தியதாகவும்,  தனிப்பட்ட முறையில், தாக்குதல்களை தடைசெய்யும் தங்களது விவாகரத்து ஒப்பந்தத்தையும் அவர் மீறியதாக கூறியுள்ளா.ர். என்னையும் எனது 12 வயது மகளையும் தொடர்ந்து தொந்தரவு செய்கிறார், எங்களைப் பற்றி அவதூறு பரப்ப பணம் செலுத்தி ஆன்லைனில் இன்டர்வியூ கொடுக்கிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக, தங்கள் மகளைப் பார்க்க அமிர்தா தடை விதிப்பதாக பாலா கூறியிருந்த நிலையில், 12 வயது சிறுமி தனது தந்தையின் செயல்களால் தானும் தாயும் சந்தித்த மன உளைச்சலை விளக்கும் வகையில் வலைதளங்களில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Bala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment