நடிகர் மட்டும் இல்ல, கே.பி.ஒய் பாலா ஸ்டேட் ப்ளேயர்; எந்த விளையாட்டு தெரியுமா?

நடிகர் பாலா நடிப்பது மட்டுமல்ல விளையாட்டிலும் ஸ்டேட் ப்ளேயராக இருந்துள்ளார். அது என்ன விளையாட்டு என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

நடிகர் பாலா நடிப்பது மட்டுமல்ல விளையாட்டிலும் ஸ்டேட் ப்ளேயராக இருந்துள்ளார். அது என்ன விளையாட்டு என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

author-image
WebDesk
New Update
bala

நடிகர் மட்டும் இல்ல, கே.பி.ஒய் பாலா ஸ்டேட் ப்ளேயர்; எந்த விளையாட்டு தெரியுமா?

தனியார் தொலைக்காட்சியில் வெளியான  'கலக்கப்போவது யாரு' மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த  பாலா பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார். தற்போது  'காந்தி கண்ணாடி' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படம் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisment

இயக்குநர் ஷெரீஃப் இயக்கிய இந்த படத்தில்  நமீதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.  ‘காந்தி கண்ணாடி’ என்பது நகைச்சுவை நடிகராக மட்டும் பார்க்கப்பட்ட பாலாவின் திறமையை, உணர்வுப்பூர்வமான கதையகத்தில் ஒரு நடிகராகவும் வெற்றிகரமாக நிலைநிறுத்தும் ஒரு முக்கிய படைப்பு எனலாம்.

நடிகர் பாலா நடிப்பது மட்டுமல்லாமல் சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.  புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்குதல், அனகபுத்தூரில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச ஆட்டோ சேவை தொடங்குதல் போன்ற பல சேவைகள் மூலம் சமூகத்தில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். 

மேலும் நடிகர் அபினயின் மருத்துவ செலவுகளுக்காக ரூ.1 லட்சம் நன்கொடை அளித்துள்ளதும் அவரது சிறந்த பண்பை எடுத்துக் காட்டுகிறது. திரைத்துறையில் வளர்ச்சியோடு சமூகத்துக்கும் பங்களிக்கிற ஒரு அரிய நகைச்சுவை நடிகராக பாலா வலம் வருகிறார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் பால் பேட்மன் ஸ்டேட் ப்ளேயராகவும் இருந்துள்ளார். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய பாலா, “ நான் திடீரென நன்றாக படிப்பேன். சிலது படிக்க மாட்டேன் ஸ்போர்ஸ்சுக்கு போய்ருவேன். கிளாஸ ஒழுங்க அட்டெண் பண்ணுனா படிப்பேன்.

Advertisment
Advertisements

நான் பால் பேட்மன் ஸ்டேட் பிளேயராக இருந்தேன்” என்றார். இதை கேட்டு ஆச்சர்யப்பட்ட விஜே, “உங்க அம்மா சொன்ன ஒரு விஷயம் எப்போதும் என் நினைவில் இருக்கும். என் பையன் பாலாவை தூக்கி தண்ணீரில் போட்டீர்கள் என்றால் மிதப்பான். தரையில் போட்டால் நடப்பான். வானத்தில் போட்டால் பறப்பான் என்றார். அது ரொம்ப நல்லா இருந்திச்சு. எப்படிடா இப்படி சொல்றாங்கனு நெனச்சேன். நிஜமாவே நீ பெரிய ஆளா இருப்ப போல” என்று பாலாவை கலாய்த்தார்.

Cinema Bala

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: