நம்பியாருக்கு நான் அசிஸ்டன்ட்டா? தினமும் ஷூட்டிங்கில் அழுத நடிகர் செந்தில்: பாக்யராஜ் சொன்ன உண்மை!

நகைச்சுவையில் தமிழகத்தின் லாரல் மற்றும் ஹார்டி என்பர் புகழப்பட்ட ஒரே நகைச்சுவை ஜோடி தான் செந்தில் மற்றும் கவுண்டமணி. அனால் செந்தில் அவர்கள் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு நிறைய அவமானத்தை சந்தித்திருக்கிறார்.

நகைச்சுவையில் தமிழகத்தின் லாரல் மற்றும் ஹார்டி என்பர் புகழப்பட்ட ஒரே நகைச்சுவை ஜோடி தான் செந்தில் மற்றும் கவுண்டமணி. அனால் செந்தில் அவர்கள் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு நிறைய அவமானத்தை சந்தித்திருக்கிறார்.

author-image
WebDesk
New Update
Screenshot 2025-09-06 122753

தமிழ் சினிமாவில் 1980களின் துவக்கத்தில் இருந்து 1990களின் இறுதிவரை கொடிகட்டி பறந்த உச்ச நடிகர்களில் செந்திலும் ஒருவர். ஒரு படத்தின் கதாநாயகனிடம் கால் சீட் வாங்குவதற்கு முன்பாக, செந்திலிடம் கால் ஷீட் வாங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் அப்போது இருந்தது. காரணம் அந்த அளவிற்கு அவர் ஒரு பிசியான நடிகராக வலம்வந்தார். 1985ம் ஆண்டு தொடங்கி 1999 ஆம் ஆண்டு வரை வருடத்திற்கு குறைந்தபட்சம் 20 முதல் 25 திரைப்படங்கள் வரை நடித்து புகழின் உச்சியில் வளம் வந்தவர் செந்தில். கவுண்டமணி மற்றும் செந்தில் ஜோடி தமிழ் சினிமா உலகில் மிகச்சிறந்த காமெடி ஜோடியாக பல ஆண்டுகளாக திகழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ஹாலிவுட் உலகை கலக்கிய லாரல் மற்றும் ஹார்டி ஜோடி போல மிகசிறந்த காமடி ஜோடியாக தமிழ் சினிமாவை ஆண்ட இரு மன்னர்கள் இவர்கள் என்றால் அது நிச்சயம் மிகையல்ல. கவுண்டமணி மற்றும் செந்தில் கூட்டணியில் மட்டும் 100க்கும்  மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளது. கரகாட்டக்காரன் படம் வெளியாகி 36 ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனாலும் அந்த வாழைப்பழ காமெடிக்கு நிகர் அந்த காமடியே. 

நடிகர் செந்தில், 1979 ஆம் ஆண்டு "ஒரு கோயில் இருதீபங்கள்" படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்னர் மேடை நாடகங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சிறந்த காமெடி திறமை இருந்தும், இளம் வயதில் முடி கொட்டியதால் 30க்கு முன்பே பாதி முடியை இழந்த அவர், இதற்காக பலரால் கேலி செய்யப்பட்டுள்ளார். இன்று வரை அவரது நகைச்சுவையை மக்கள் ரசிப்பது, அவரது திறமைக்கு சாட்சி.

1979ம் ஆண்டுக்கு முன் நடிகர் செந்தில் நாடகங்களில் நடித்து வந்த காலத்தில் பலர் அவரை கேலி செய்து வந்துள்ளனர். நாடகத்தில் சிறப்பாக அவர் நடித்தாலும், ஓய்வு நேரத்தில், அவருடைய பணியாற்றும் பெரிய நடிகர்கள் "டேய் சொட்ட போய் டீ வாங்கிட்டு வாடா" என்று தான் பேசுவர்களாம். இப்படி அடிக்கடி உருவாக் கேலி செய்யப்பட்டாலும், தன்னுடைய சினிமா வாழ்க்கையை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு, அவர்கள் பேச்சை எல்லாம் பொறுத்துக்கொண்டு அவர்கள் தரும் பணிகளை மறுக்காமல் செய்வாராம். இப்படிப்பட்ட நேரத்தில் தான் நடிகர் செந்தில் நடிக்கும் நாடகங்களில் கதை வசனம் எழுத வந்துள்ளார் இயக்குனர் பாக்யராஜ்.  

Advertisment
Advertisements

ஒரு நாடகத்தில் செந்திலின் நடிப்பை பார்த்த பாக்யராஜ் அவரால் கணிசமாகக் கவரப்பட்டார். ஆனால் பிறகு செந்தில் பலரால் கேலி செய்யப்படுவதைக் கண்டاوே மனம் நொந்தார். அதனால், ஒருநாள் இயக்குனராக மாறும்போது அவசியம் செந்திலுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று உறுதி செய்தார்.

இயக்குனராக வந்த பாக்யராஜ், "தூறல் நின்னு போச்சு", "இன்று போய் நாளை வா", "மௌன கீதங்கள்" போன்ற படங்களில் செந்திலுக்கு முக்கிய கதாபாத்திரங்கள் வழங்கி அவரை உயர்த்தினார். 44 வருடமாக தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்த செந்தில் இன்று ஒரு லெஜெண்ட். அவரது மகன் மணிகண்ட பிரபு சென்னையில் பல் மருத்துவராக செயல்பட்டு, பலருக்கு இலவச சிகிச்சையும் வழங்குகிறார். இதை ஒரு நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார் பாகியராஜ் அவர்கள். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: