Advertisment

'நண்பன் சிவகார்த்திகேயன் பேசாமல் இருப்பது ஏன்?' வேதனையை கொட்டிய பிளாக் பாண்டி

Comedy Actor Black Pandi reveals Problem with sivakarthikeyan Tamil News: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், தன்னுடன் பேசாமல் இருப்பது தனக்கு வேதனை அளிக்கிறது என நகைச்சுவை நடிகரும், சிவகார்த்திகேயனின் நண்பருமான "பிளாக் பாண்டி" கூறியுள்ளார்.

author-image
WebDesk
Dec 29, 2021 11:15 IST
New Update
Actor Black Pandi Tamil News: Pandi Reveals Problem with sivakarthikeyan

Tamil cinema Tamil News: சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து பிரபலமாவார்கள் பலர் இருக்கிறார்கள். இதில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தனி இடம் உண்டு. தமிழில் முன்னணி ஹீரோவாக உருவெடுத்துள்ள இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய காமெடி டிவி ஷோ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். டைமிங் காமெடி, நேர்த்தியான நிகழ்ச்சி தொகுப்பு என சின்னத்திரையில் சுழன்று வந்தார்.

Advertisment

கடந்த 2012ம் ஆண்டு வெளிவந்த மெரினா திரைப்படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார் சிவகார்த்திகேயன். தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என ஹிட் படங்களை கொடுத்து டிவி விருதுகளையும், தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, 4 முறை எடிசன் விருது, 3 முறை SIIMA விருதுகள் மற்றும் 3 முறை விஜய்டிவி விருதுகள் என விருதுகளை வாங்கிக் குவித்தார்.

publive-image

ரஜினி முருகன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளிவந்த படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை. அவரது அடையாளமான காமெடி நடிப்பை மறந்து புதிதுபுதிதாக முயர்த்திருந்தார். இதனால் தமிழ் சினிமாவில் பெருத்த பின்னடைவை சந்தித்திருந்தார்.

இந்நிலையில், இந்தாண்டு இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ‘டாக்டர்’ படம் அவரது கேரியரில் திருப்புமுனையாக அமைத்துள்ளது. திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் படம் வெற்றி தான். அதோடு தியேட்டர் அதிபர்களை ‘டாக்டர்’ குளிரவைத்து இருக்கிறார்.

publive-image

‘டாக்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டான், ஐலான் போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். தவிர, தனது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸின் கீழ் சில படங்களையும் தயாரித்து வருகிறார்.

பிளாக் பாண்டி வேதனை

இப்படி தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், தன்னுடன் பேசாமல் இருப்பது தனக்கு வேதனை அளிக்கிறது என நகைச்சுவை நடிகரும், சிவகார்த்திகேயனின் நண்பருமான "பிளாக் பாண்டி" கூறியுள்ளார்.

publive-image

நடிகர் பிளாக் பாண்டி

நடிகர் பிளாக் பாண்டி சமீபத்தில் ரெட்பீக்ஸ் (REDFIX) யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், "விஜய் டிவியில் இருந்த போது சிவாவும் நானும் நல்ல ப்ரண்ட்ஸ். கோயம்புத்தூரில் இருக்கும் கல்பனா ஸ்டூடியோவில் நாங்கள் எடுத்த போட்டோ கூட இன்னும் வச்சுருக்கேன்.

publive-image

Image credit: REDFIX youtube channel / நடிகர் பிளாக் பாண்டி

சிவா பாக்கும் போது பேசுவப்புல, பெரிய பெரிய பொறுப்புகள்ள இருக்கப்புல. நான் ரொம்ப கஷ்டபட்ட சமயத்தில் சிவாவுடைய மேமேஜர் காசு கொடுக்க வந்தார். ஆனால், நான் காசு வேண்டாம், படத்துல கேரக்டர் இருந்தா குடுங்க என்று ரிட்டன் அனுப்பிட்டேன்.

அந்த மேனேஜர் சிவாவிடம் போய் என்ன சொன்னார்ன்னு தெரியல. அப்பல இருந்து அவன் என்னட்ட சரியாக பேசுறது இல்லை. அதற்கு நானும் வருத்தப்பட்டது இல்லை.

என்னுடைய மனநிலையை பழகுனாதான் புரிஞ்சுக்குவாங்க. நான் முன்னாடி இருந்தத பார்த்திட்டு பேசுனாங்கனா அத ஒண்ணுமே செய்ய முடியாது" என்று வேதனை தெரிவித்துள்ளார் பிளாக் பாண்டி.

publive-image

நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கனா காணும் காலங்கள் தொடர் மூலம் பிரபலமானவர். தொடர்ந்து அவர் வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் நடித்துள்ளார்.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Cinema #Entertainment News Tamil #Sivakarthikeyan #Vijay Tv #Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment