ஒரே நாளில் அக்கா, அண்ணன் மரணம்: நடிகர் போஸ் வெங்கட் வீட்டில் சோகம்

நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரியும், சகோதரரும் அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரியும், சகோதரரும் அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Actor Bose venkat Sister, Brother passes away

Actor Bose venkat Sister, Brother passes away

நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக உள்ளார். சன் டி.வியில் ஒளிபரப்பான மெட்டிஒலி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானார். சின்னத்திரை மட்டுமல்லாது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். துணை நடிகராகவும், வில்லன் கதாப்பாத்திரங்களிலும் நடித்து உள்ளார்.

Advertisment

இந்நிலையில் போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி மாரடைப்பு காரணமாக நேற்று (ஜுன் 23) சென்னையில் காலமானார். சென்னை எம்.எம்.கே பகுதியில் உள்ள அவரது வீட்டில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இந்த இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக போஸ் வெங்கட்டின் சகோதரரான ரங்கநாதன் சென்னை வந்துள்ளார்.

அறந்தாங்கியில் இருந்து இறுதி சடங்கில் பங்கேற்க ரங்கநாதன் சென்னை வந்தார். சகோதரியின் இழப்பை தாங்க முடியாமல் ரங்கநாதன் கதறி அழுதுள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சகோதரியின் உடல் மீது சாய்ந்து விழுந்து மரணம் அடைந்தார்.

போஸ் வெங்கட்டின் மறைந்த சகோதரியின் உடல் நேற்று சென்னையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது சகோதரர் மறைந்த ரங்கநாதன் உடல் சொந்த ஊரான அறந்தாங்கிக்கு எடுத்து செல்லப்பட்டு இன்று இறுதி சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

போஸ் வெங்கட்டின் அக்கா, அண்ணன் இருவரும் ஒரே நாளில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகத்தினர் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: