சந்திரபாபு, இவரின் அங்க அசைவுகளும், பார்வைகளும், மெளனங்களும் நமக்குள் சிரிப்பை உண்டுபண்ணும். கண்ணில் நீர் வரச் சிரிப்போம். அதேசமயம், அந்த மனிதரின் வாழ்வின் சோகங்களை நினைத்து கண்ணீர் விட்டு அழுவோம்.
சந்திரபாபு திரையுலகிற்குள் வருவதற்கு பல போராட்டங்களைச் சந்தித்தார். திரையுலகில், ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் கேட்பதாலேயே இவர் மிகவும் பிரபலம்.
'சபாஷ் மீனா' படத்தில் சிவாஜி கணேசனைவிட ஒரு ரூபாய் அதிக சம்பளம் வாங்கினார்.
சென்னை சாந்தோமில் 20 கிரவுண்டில் பிரம்மாண்டமாக வீடு கட்டினார். ஆனால், கடைசி காலத்தில் வாடகை வீட்டில், மின்சாரக் கட்டணம் செலுத்த கூட பணமில்லாமல் உணவுக்கு வழியில்லாம் இருந்தார்.
சந்திரபாபு முதல் சினிமா வாய்ப்புக்காக பட்ட கஷ்டங்கள் குறித்து துரை சரவணன் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.
‘சந்திரபாபுவுக்கு எப்படியாவது சினிமாவுல பெரிய ஆளா ஆகணும் ஆசை, ஆனா அவரோட அப்பா சினிமாவே சுத்தமா பிடிக்காத ஒரு சுதந்திர போராட்ட தியாகி.
தன் அப்பாவின் எதிர்ப்பையும் மீறி, எழுத்தாளர் புதுமைப்பித்தன் உதவியோட கலைவாணி ஃபிலிம்ஸ்ல சந்திரபாபு வேலைக்கு சேர்ந்தாரு. சந்திரபாபு ரொம்ப வெளிப்படையா பேசுறது அங்க இருக்கிறவங்களுக்கு புடிக்கல. அதனால அங்க இருந்து வெளியே வர்றாரு. சந்திரபாபு அப்பா, இந்த விஷயத்தை கேள்விப்பட்டு ரொம்ப கோவப்பட்டாரு… இனிமே சினிமா வேண்டாம்னு கண்டிக்கிறாரு.
அப்பாவால நம்மளோட சினிமா கனவு கலைஞ்சு போயிருமோன்னு நினைச்ச சந்திரபாபு வீட்டை விட்டு வெளியேறுறாரு..
சாப்பாட்டுக்கே வழி இல்லாம ஃபிளார்ட்பார்ம்ல தான் சந்திரபாபு படுத்தாரு. வெறும் வயித்துல தண்ணிய மட்டும் குடிச்சிட்டு, எல்லா சினிமா கம்பெனிலயும் ஏறி இறங்கி வாய்ப்பு கேட்டாரு..
அப்படி ரொம்ப நாள் சாப்பிடமா இருக்கும்போது ஒருநாள் சந்திரபாபு ரோட்லய மயக்கம் போட்டு விழுந்தாரு.. அவர் நண்பர்கள் எல்லாம் பதறிப்போயி, அவரை மருத்துவமனையில சேர்த்து பார்த்துட்டு இருந்தாங்க.
அப்போ தான் சந்திரபாபு, தன் நண்பர்கள்கிட்ட ’நான் பசியில தான் மயங்கி விழுந்தேன். அதுக்கான மருந்தே சாப்பாடு தான். ஹாஸ்பிடல்ல சாப்பாடு போட்டுட்டாங்க.. நாளைக்கு என்னை டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. மறுபடியும் எனக்கு எப்போ சாப்பாடு கிடைக்கும் எனக்கு எப்போ சினிமாவுல வாய்ப்பு கிடைக்கும், என்னோட போராட்டங்களுக்கு தான் எப்போதான் முடிவு வரும்னு தெரியலையே’ சொல்லி கண் கலங்குறாரு..
அப்போ சந்திரபாபுவோட நெருங்கிய நண்பர் கணபதி, ’டேய் உன்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு, நீ கவலைப்படாதே.. ஒரே இடத்துல உட்கார்ந்து இருக்காதே.. நாலு இடத்துக்கு போ. நாலு பேரை பாரு. கண்டிப்பா உனக்கு வாய்ப்பு கிடைக்கும். நீ வாழ்க்கையில பெரிய ஆளா வருவ’ சொல்லி தொடர்ந்து ஊக்கப்படுத்துறாரு…
மறுபடியும் சந்திரபாபு வாய்ப்பு தேடுறாரு. மறுபடியும் மூணு, நாளு சாப்பாடு கிடைக்காத நிலைமை. பசி தாங்காம நைட் 2 மணிக்கு, தன்னோட நண்பர் கணபதி வீட்டுக்கு போயி சந்திரபாபு கதவு தட்டுறாரு..
கணபதி கதவு திறந்து பார்க்கும் போது வெளியே சந்திரபாபு நிக்கிறாரு..
சாப்பிட்டு ரெண்டு, மூனு நாள் ஆச்சு. கொஞ்சம் சாப்பாடு இருந்தா போடேன்னு’ சந்திரபாபு பரிதாபமா கேட்கிறாரு. அப்புறம் கணபதி, பக்கத்துல இருந்த டீக்கடைக்கு கூட்டிட்டு போயி டீயும், ரொட்டியும் வாங்கிக் கொடுக்கிறாரு.
அதை சாப்பிட்டு பசி போன உடனே மறுபடியும் சந்திரபாபு சினிமா பத்தி பேச ஆரம்பிச்சுட்டாரு.
அந்த காலத்துல ஒருவேளை சாப்பிடுறதுக்கு கொஞ்சமாவது பணம் வேணும், அந்த பணத்தை சம்பாதிக்கிறதுக்கு சந்திரபாபு பண்ணதுதான் ரொம்ப ஆச்சரியமான விஷயம்.
அந்த காலத்துல சாந்தோம் பீச்சில இசையமைப்பாளர் வேதா, தபேலா ராம் ரெண்டு பேரும் சேர்ந்து மக்கள்கிட்ட காசு வாங்கிறதுக்காக கீழ பெரிய துணியை விரிச்சு போட்டு கச்சேரி பண்ணுவாங்க. அப்போ, சந்திரபாபு கோமாளி மாதிரி வேஷம் போட்டு, வேடிக்கை காண்பிச்சு மக்களை அந்த இடத்துக்கு கூட்டிட்டு வருவாரு.
அதுல கிடைக்கிற கொஞ்சம் பணத்துல, கிடைக்கிறத சாப்பிட்டு சினிமாவுல வாய்ப்பு தேடி அலைஞ்ச அந்த வறுமையான காலத்தில் கூட சந்திரபாபுவின் சேட்டையும், குறும்புத்தனமும் கொஞ்சம் கூட குறையல…
இப்படி பல விஷயங்களை துரை சரவணன் தன் யூடியூப் வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.