/indian-express-tamil/media/media_files/2025/09/07/charlie-mammootty-2025-09-07-15-22-58.jpg)
திரையுலகில் பல ஆண்டுகளாக நகைச்சுவை நடிப்பால் நம் மனதைக் கவர்ந்தவர் நடிகர் சார்லி. இவர் விகடனுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தனது திரைப்பயணம் மற்றும் நகைச்சுவையின் முக்கியத்துவம் குறித்து பல சுவாரசியமான தகவல்கலை பகிர்ந்துள்ளார். சார்லி 1982 ஆம் ஆண்டு இயக்குனர் கே. பாலசந்தரின் 'பொய்க்கால் குதிரை' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கிட்டத்தட்ட 800-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். 'தெனாலி', 'தளபதி', 'அமராவதி', 'ஃப்ரண்ட்ஸ்', 'பாபநாசம்' போன்ற பல படங்களில் இவரது நடிப்பு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். ஒரு நகைச்சுவை நடிகர் தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க, தன்னைத் தானே வருத்திக்கொள்ள வேண்டும் என்று சார்லி கூறினார். உணர்வுகளுக்கும், உடல் மொழிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தையும் அவர் விளக்கினார். உடல் மொழி என்பது உணர்வுகளின் வெளிப்பாடு என்றும், சைகைகள் என்பது பார்வையாளர்களுக்கு எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பது பற்றியது என்றும் குறிப்பிட்டார். ஒரு நடிகர் தன் வாழ்க்கையில் நேர்மையாக இருந்தால் மட்டுமே, தன்னால் அனைத்தும் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவின் நகைச்சுவை மற்ற மொழிகளில் இருந்து தனித்துவமானது என்று சார்லி குறிப்பிட்டார். தமிழில் ஒரு சோகமான அல்லது உணர்ச்சிபூர்வமான காட்சிக்கு நடுவில் நகைச்சுவை வரும்போது, அதற்கு அதிக வரவேற்பு கிடைப்பதாகவும் அவர் கூறினார். மேலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எம்.ஆர். ராதா போன்ற கலைஞர்கள் நகைச்சுவை மூலம் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
‘பிரண்ட்ஸ்’ படத்தில் எனக்காகவே கோபால் கேரக்டரை உருவாக்குனாங்க! - சார்லி‘பிரண்ட்ஸ்’ படத்தில் எனக்காகவே கோபால் கேரக்டரை உருவாக்குனாங்க! - சார்லி #Charlie | #Friends | #Vijay | #Vadivelu | #Surya | #Throwback
Posted by VikatanTv on Sunday, March 23, 2025
சார்லியின் திரை வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்று 'ஃபிரண்ட்ஸ்' திரைப்படம். மலையாளத்தில் பெரிய வெற்றி பெற்ற இப்படத்தின் தமிழ் ரீமேக்கில், தனக்காகவே ஒரு பிரத்யேக கதாபாத்திரத்தை இயக்குநர் சித்திக் உருவாக்கினார் என்று சார்லி தெரிவித்தார். மலையாள மூலப் படத்தில் இல்லாத அந்தக் கதாபாத்திரத்தை, தமிழில் தனக்காகவே சித்திக் உருவாக்கியது அவருக்குப் பெருமையாக இருந்தது. மேலும், இந்தப் படத்தில் சார்லியின் நடிப்பைப் பார்த்து, மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். இது தனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை என்றும், இந்தத் தருணம் தனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று என்றும் சார்லி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.