விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் நடித்த நடிகர் சீனு மோகன் இன்று மாரடைப்பால் காலமானார். கிரேசி மோகன் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/seenu-mohan-1.jpg)
கிரேஸி மோகனின் நாடகக் குழுவில் முக்கிய நடிகராக பணியாற்றி வந்த குணச்சித்திர நடிகர் சீனு மோகன், 61 வயதில் இன்று மாரடைப்பால் காலமானார். சுமார் 3000-க்கும் அதிகமான மேடை நாடகங்களில் நடித்த இவர், தமிழ் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமானவர்.
நடிகர் சீனு மோகன் காலமானார்
சமீபத்தில் வெளியான இறைவி, வடசென்னை, கோலமாவு கோகிலா, செக்கச் சிவந்த வானம், மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். சீனு மோகனின் மரணம் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/seenu-mohan-2.jpg)
சீனு மோகனின் மறைவுக்கு நடிகர் கிரேஸி மோகன் உட்பட தமிழ் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது உடல் சென்னை அண்ணாநகரில் உள்ள மின் மயானத்தில் நாளை மறுநாள் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.