ஆஸ்திரேலியா முதல் ஐதராபாத் வரை; ஒரே நேரத்தில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் படங்களில் மாறி மாறி நடித்த சந்தானம்

நடிகர் மற்றும் காமெடியன் சந்தனத்தை தெரியாத ஆளே இல்லை என்று த சொல்ல வேண்டும். அவர் ஒரு நேர்காணலில் அவரது எப்படி உலகம் முழுவதும் சுற்றி சுற்றி ஷூட்டிங் க்கு சென்றார் என்று கூறியிருந்தார்.

நடிகர் மற்றும் காமெடியன் சந்தனத்தை தெரியாத ஆளே இல்லை என்று த சொல்ல வேண்டும். அவர் ஒரு நேர்காணலில் அவரது எப்படி உலகம் முழுவதும் சுற்றி சுற்றி ஷூட்டிங் க்கு சென்றார் என்று கூறியிருந்தார்.

author-image
Mona Pachake
New Update
santhanam

கவுண்டமனி - செந்தில், நாகேஷ், வடிவேலு, விவேக் ஆகியோருக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமா தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய நகைச்சுவை நடிகர் என்றால் அது சந்தானம் தான்.

Advertisment

இவர் கடந்த 1980ம் ஆண்டு ஜனவரி 21ந் தேதி சென்னையில் பிறந்தார். இவர் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகும் முன்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்கிற நகைச்சுவை நிகழ்ச்சியில் புதுப்படங்களை தன்னுடைய பாணியில் கலாய்த்து ஸ்பூஃப் செய்து வந்தார்.

நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் இன்றைக்கு மிகவும் முக்கியமான நடிகர்களில் ஒருவராக உள்ளார். கமெடி கதாபாத்திரத்தில் நடித்து, அதன் பின்னர் தற்போது, கதாநாயகனாக ஸ்கோர் செய்து வருகின்றார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த சந்தானம், சிம்புவின் மன்மதன் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Advertisment
Advertisements

அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வெற்றிகரமான காமெடியனாக வலம் வந்தார். பல படங்களில் வெற்றிக்கு இவர்தான் காரணமாக இருந்தார்.

ஒருகட்டத்தில் தான் காமெடியனாக நடிக்க மாட்டேன் எனத் தெரிவித்த அவர், தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வருகின்றார்.

இவர் காமெடியனாக நடித்து, 12 ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸ் ஆகவேண்டி இருந்த, மத கஜ ராஜா படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி பெரும் வெற்றி பெற்றது. படம் பார்த்த ரசிகர்கள், சந்தானத்தை காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக முன்னதாகவே, சந்தானம் தெளிவான ஒரு விஷயத்தைச் சொல்லி இருந்தார். அதாவது, ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன் 2 படத்தில் காமெடியனாக நடிக்க தான் எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

அதேபோல் சிம்புவிடம் பேசும்போது, காமெடியனாக அவரது படங்களில் நடிக்கத் தயார் எனவும் கூறியதாக கூறினார்.

இவர் சமீபத்தில் கொடுத்த ஒரு நேர்காணலில் அவர் எப்படி உலகம் முழுவதும் சுற்றி சுற்றி ஷூட்டிங் சென்றார் என்று பகிர்ந்தார். "நான் ஒரே நேரத்தில் வீரம், சிங்கம் 3, தலைவா மற்றும் ஐ என்று நான்கு படங்களில் ஒரே நேரத்தில் நடித்தேன். 

ஹீரோ ஆன பிறகு தான் நிறுத்தி நிதானமாக நடிக்க தொடங்கினேன்" என்று சிரிப்புடன் கூறினார். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: