சாவு வீட்டில் சிரித்துக் கொண்டே செல்பீ எடுத்த சினிமா நடிகர்.!

துக்க நடந்த வீட்ட்டில் ஆறுதல் சொல்ல வந்த நடிகர் இதுப்போன்ற செயலில் ஈடுப்பட்டது

கேரளாவில் கொலை செய்யப்பட்ட மாணவன் அபிமன்யு வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்ற பிரபல நடிகர் சுரேஷ் கோபி சிரித்துக் கொண்டே செல்பீ எடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் எர்ணா குளத்தில் உள்ள பிரபல கல்லூரியான மகாராஜா கல்லூரியில் 2-ஆம் ஆண்டு வேதியியல் படித்து வந்த அபிமன்யு என்ற மாணவன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ-இல் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் கல்லூரியில் பேனர் வைப்பது தொடர்பாக எழுந்த தகராறில் அபிமன்யு கொலை செய்யப்பட்டார்.

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் ப்ல்வேறு கண்டங்களை தெரிவித்து வருகின்றன. விவசாயக் குடும்பத்தில் பிறந்த மாணவர் அபிமன்யு எஸ்.எஃப்.ஐ-ல் இணைந்து மாணவர் பிரச்சனைகளுக்கு பெருமளவில் குரல் கொடுத்துள்ளார். அபிமன்யுவின் குடும்பத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தத்தெடுத்துள்ளது.

மகனை இழுந்து தவிக்கும் அபிமன்யு குடும்பத்திற்கு பிரபலங்கள் பலரும் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் பா.ஜ.க. எம்.பி.யும், பிரபல நடிகருமான சுரேஷ் கோபி இரண்டு தினங்களுக்கு முன்பு அபிமன்பு வீட்டிற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்தார். மாணவரின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய அவர், அவர்களின் குடும்பத்திற்கு தம்மால் முடிந்த உதவியை செய்வதாகவும் உறுதி அளித்தார்.

வீட்டை விட்டு வெளியே வந்த சுரேஷ் கோபியை பார்க்க அங்கிருந்த மக்கள் திரளாக கூடி இருந்தனர். இதனைப்பார்த்த அவர், உடனே தனது செல்போனில் சிரித்துக் கொண்டே செல்பீ எடுத்துள்ளார். இதைப்பார்த்த அபிமன்யுவின் குடும்பத்தார் சுகம் சுளித்தனர். துக்க நடந்த வீட்ட்டில் ஆறுதல் சொல்ல வந்த நடிகர் இதுப்போன்ற செயலில் ஈடுப்பட்டது பெரும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் சுரேஷ்கோபியின் செயலை கடுமையாக விமர்சித்து கருத்து கூறியுள்ளனர்.

×Close
×Close