/tamil-ie/media/media_files/uploads/2022/02/vijayakant.jpg)
நம்பவே முடியவில்லை... விஜயகாந்த் தானா இது? ஷாக் போட்டோ!
ஆளே மாறிப்போன விஜயகாந்த், இணையத்தில் வெளியானது புகைப்படம்; ரசிகர்கள் அதிர்ச்சி
/tamil-ie/media/media_files/uploads/2022/02/vijayakant.jpg)
Advertisment
Actor cum Politician Vijayakant latest photo goes viral fans shocks: சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள, நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் சமீபத்திய புகைப்படம் ரசிகர்களையும், அவரது கட்சி தொண்டர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
80 களில் இருந்து தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடம் பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். ஒருபுறம் ரஜினியும் கமலும் போட்டி போட்டுக்கொண்டு புகழின் உச்சியில் ஏறிக் கொண்டிருக்க, மறுபுறம் தனது திறமையாலும், யதார்த்த, ஏழை மக்களை சென்றடையும் வகையிலான படங்களினாலும் புகழின் உச்சிக்கு சென்றவர் விஜயகாந்த்.
கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்தது முதல், ரசிகர்களால் இன்று வரை கேப்டன் என அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். இதுவரை 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், பல வெள்ளி விழா கண்ட வெற்றிப் படங்களிலும் நடித்துள்ளார். தனது கம்பீரமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை தனதாக்கி கொண்டவர் விஜயகாந்த்.
சினிமாவில் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்த விஜயகாந்த், மக்கள் சேவைக்காக அரசியலில் நுழைந்தார். இதற்காக தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து, தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். போட்டியிட்ட முதல் தேர்தலில் எம்.எல்.ஏ.,வானவர், அடுத்த தேர்தலில் எதிர்கட்சி தலைவராக உயர்ந்தார். பின்னர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த், சினிமாவில் நடிப்பதிலிருந்து விலகியுள்ளார். அதேபோல் நேரடி அரசியலில் இருந்தும் விலகியுள்ளார்.
இதையும் படியுங்கள்: பரோட்டாவுக்கு மாவு பிசைவது போல் அஜித் டான்ஸ் இருக்கிறதா? விமர்சன சர்ச்சை
சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு சில ஆண்டுகளாகவே முழு ஓய்வில் உள்ளார். இதற்காக அமெரிக்காவில் சிகிச்சையும் எடுத்துக் கொண்ட, விஜயகாந்தின் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றது.
அதேபோல தற்போதும் விஜயகாந்தின் சமீபத்திய படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. எப்போதும் சிரித்த முகத்துடன் ரசிகர்களை கவர்ந்து வந்த விஜயகாந்த், படங்கள் மற்றும் அரசியல் மேடைகளில் கம்பீரமாக கர்ஜித்த விஜயகாந்த், தற்போது உடல்நலக்குறைவால் உடல் இளைத்து, முகமே மாறி, அடையாளம் தெரியாத தோற்றத்திற்கு மாறியுள்ளார். இதைப்பார்த்த விஜயகாந்தின் ரசிகர்களும், தொண்டர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
எப்படி இருந்த கேப்டன்.. Time is cruel.. pic.twitter.com/DAg2KSlTP7
— James Stanly (@JamesStanly) February 27, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.