Advertisment

பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மரணம்: கமல் படத்தில் நடித்து கவனம் பெற்றவர்

கமல் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்தது இவருக்கு தனி அடையாளத்தையும், பாராட்டையும் பெற்று தந்தது.

author-image
WebDesk
New Update
Daniel b.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிரபல நடிகர் டேனியல் பாலாஜி உயிரிழந்தார். நேற்று இரவு (மார்ச் 29) வீட்டில் இருந்த போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வழியில் அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 48. 

அவரது மறைவு தமிழ் திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

கமல், விஜய், தனுஷ் உள்பட முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து தனிக்னெ தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டார். குறிப்பாக கமல்  நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தி இவரது பாத்திரம் இவருக்கு அடையாளத்தைப் பெற்று தந்தது. 

சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்கு வந்தவர்  டேனியல் பாலாஜி. தொடக்கத்தில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்தார். அடுத்து கொளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘காக்க காக்க’ படத்தில் ஸ்ரீகாந்த் என்ற போலீஸ் பாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். தொடர்ந்து அவரது இயக்கத்தில் வெளியான கமல் நடித்த  ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் வில்லனாக என்டரி கொடுத்தது இன்று வரை அவருக்கு புகழைப் பெற்று தந்தது. அவரின் குரல், உடல் மொழி, நடிப்பு என அத்தனையும் அப்படி பொருந்தி போனது. 

தொடர்ந்து, தனுஷின் பொல்லாதவன் படத்தில் ரவி கதாப்பாத்திரம், வை ராஜா வை, அச்சம் என்பது மடமையடா, பைரவா, வட சென்னை, பிகில் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பொது  மக்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

 

 

Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment