New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/07/dhanush-1.jpg)
நடிகர் தனுஷ தமிழ் இந்தி என நடித்து வந்த நிலையில்தற்போது ஹாலிட்டில் தி கிரே மேன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
நடிகர் தனுஷ் பிரபல பாலிவுட் நடிகையுடன் கைகோர்த்து ஒன்றாக நின்ற வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் மட்டுமல்லாது தற்போது இந்திய சினிமாவில் அனைவருக்கும் பிரபலமான ஒரு நடிகர் தனுஷ. தமிழ் இந்தி என நடித்து வந்த அவர் தற்போது ஹாலிட்டில் தி கிரே மேன் என்ற படத்தில் நடித்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், தி கிரே மேன் படத்தில் பணியாற்றிய அனைருக்கும் மும்பையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் பார்ட்டி வைக்கப்பட்டது. படக்குழுவினர் மட்டுமல்லாமல் பாலிவுட் திரையுலகை சேர்ந்த சில நட்சத்திரங்களும் இந்த பார்ட்டியில் கலந்துகொண்டனர்.
அந்த வகையில் தனது இந்தியின் 3-வதாக நடித்த அட்ராங்கி ரே என்ற படத்தில் நாயகியாக நடித்த நடிகை சாரா அலிகான் இந்த பார்ட்டியில் பங்கேற்றார். அப்போது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், நடிகர் தனுஷூடன் சாரா அலிகான் கைகோர்த்து நின்றிருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றனர்.
#Dhanush & #SaraAliKhan reunite at #TheGrayMan’s party. Apart from Sara Ali Khan, #ShahidKapoor, #AnanyaPanday, #MiraKapoor and several other celebrities arrived for the bash thrown by Ritesh Sidhwani for the #RussoBrothers in Mumbai. pic.twitter.com/aHfwRhSVQu
— Pinkvilla South (@PinkvillaSouth) July 23, 2022
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது சிலர் நடிகர் தனுஷை அண்ணா என்று அழைத்துள்ளனர். இதை கேட்டு சாரா அலிகான் ஏன் உங்களை அண்ணா என்று சொல்கிறார்கள் என்று கேட்க அதற்கு தனுஷூம் எனக்கு தெரியவில்லை என்று சொல்கிறார். இது தொடர்பாக வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த பார்ட்டியில் தனுஷ் சாரா அலிகான் இருவரும் தனித்தனியாக பத்திரிக்கையாளர்களுக்கு போஸ் கொடுத்ததை தொடர்ந்து, நடிகர் ஷாஹித் கபூர் மற்றும் அனன்யா பாண்டே உள்ளிட்ட பலர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.