தனுஷ் ஹீரோவாக அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தை இயக்கியவர் கஸ்தூரி ராஜா. இதில் தனுஷ் ஒரு பள்ளி மாணவனாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் தனுஷின் நண்பராக நடித்தவரே அபிநய்.
இவர் ஒரு ஸ்மார்ட் தோற்றமுள்ளவர் என்பதால், துள்ளுவதோ இளமை படத்திற்குப் பிறகு தமிழ், மலையாளம் என்று மொழிப் படங்களிலும் அவசரமாக நடிக்கத் தொடங்கினார்.
குறிப்பாக, இப்போது நடிப்பில் அசுர திறமை காட்டும் பஹத் பாசில் நடித்த முதல் மலையாள படத்திலும் அபிநய் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், அபிநய் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்வதற்கே தேவையான பணம் இல்லாமல் மிகுந்த சிரமத்தில் இருந்தார்.
இதைப் பற்றி அறிந்த கேபிஒய் பாலா அண்மையில் அவரது வீட்டிற்கு எதிர்பாராத விதமாக சென்று, அபிநய்யின் உடல்நிலையை விசாரித்தார். அப்போது, அவரது மருத்துவ செலவுக்காக ரூ.1 லட்சம் பண உதவியையும் வழங்கினார்.
இந்த திடீர் உதவியால் மிகவும் உணர்ச்சிவசப்படைந்த அபிநய், கண்களில் கண்ணீர் விட்டு அவருடைய நன்றியை தெரிவித்தார். பின்னர், அவர் விரைவில் முழுமையாக சுகமடைய பாலா அவரது ஆதரவையும் தெரிவித்தார்.
பாலா தனது உதவியை வழங்கிய பிறகு, நடிகர் தனுஷ் மீது பலரும் விமர்சனங்களை வைத்தனர். பழக்கமான தொடர்பில்லாத பாலா கூட ரூ.1 லட்சம் வழங்கிய நிலையில், துள்ளுவதோ இளமை படத்தில் இணைந்து நடித்த தனுஷ் ஏன் எதுவும் செய்யவில்லை எனக் கேள்விகள் எழுந்தன.
திரைப்படங்களில் கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் நிலையில், ஒரு முன்னாள் சக நடிகருக்கு உதவ தயாராக இல்லையா என நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பினர். இந்நிலையில், தற்போது நடிகர் தனுஷும் அபிநய்க்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
அபிநய்யின் மருத்துவ செலவுகளை மேட்கொண்டு, நடிகர் தனுஷ் தற்போது ரூ.5 லட்சம் வழங்கி உதவியுள்ளார். இது குறித்து ரசிகர்கள், "தனுஷ் தாமதமாக உதவியிருந்தாலும், நல்ல தொகையுடன் உதவி செய்திருக்கிறார்" என பாராட்டி வருகின்றனர்.
இதுவரை அபிநய்க்கு வழங்கப்பட்ட உதவிகளில் இது மிகப்பெரிய தொகையாக இருப்பதால், சமூக வலைதளங்களில் தனுஷுக்கு பாராட்டுகள் வெள்ளமாக வந்துவருகின்றன. இந்த தொகை, அபிநய்யின் அறுவை சிகிச்சைக்கு மிகுந்த ஆதரவாக இருக்கும் என்பது குறிப்பிடப்படுகிறது.