நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள ஜகமே தந்திரம் படத்தின் எஞ்சிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கொரோனா காரணமாக இந்த படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது. படத்தின் ட்ரெய்லர் ஜூன் 1ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது.
இப்படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது எஞ்சிய பாடல்கள் வெளியாகி உள்ளது.
படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். யூடியூபில் வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த பாடல்கள் பல லட்சம் வியூஸ்களை கடந்துள்ளது.