தி க்ரே மென் : அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள் படத்தில் நடிப்பு அசுரன்!

ராயன் கோஸ்லிங், க்றிஸ் ஈவன்ஸ், ஆன டே ஆர்மஸ் ஆகியோருடன் தனுஷ் இந்த படத்தில் நடிக்க உள்ளார்.

Actor Dhanush joins with Avengers directors for the gray man netflix film
The Gray Man : அவஞ்சர்ஸ் படத்தை தயாரித்த அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ இயக்கத்தில் அதிரடி திகில் திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. மார்க் க்ரேனே எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட உள்ள இந்த படத்திற்கு தி க்ரே மென் (The Gray Man) என்று பெயரிட்டுள்ளனர் திரைப்படக் குழுவினர்.

இந்த படத்தில் நடிப்படதற்காக தேர்வாகியுள்ளார் நடிகர் தனுஷ். ராயன் கோஸ்லிங், க்றிஸ் ஈவன்ஸ், ஆன டே ஆர்மஸ் ஆகியோருடன் தனுஷ், ஜெஸிகா ஹென்விக், வாக்னெர் மௌரா மற்றும் ஜூலியா பட்டர்ஸ் ஆகியோரும் நடிக்க உள்ளனர் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது நெட்ஃப்ளிக்ஸ் ஃபிலிம்.

தமிழ் திரையுலகில் சிறந்த நட்சத்திரமாக விளங்கும் தனுஷ் தொடர்ந்து பல்வேறு மொழிப்படங்களில் நடித்து வருவது அவர்களின் ரசிகர்களுக்கு பெறும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தர ட்விட்டரில் தற்போது தி க்ரே மென் கொண்டாட்டம் தான்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actor dhanush joins with avengers directors for the gray man netflix film

Next Story
விஜய் ரசிகையாக டிவி சீரியல் கதாநாயகி பாத்திரம்; வைரல் வீடியோzee tamil tv, vijay fan, tv serial heroine vijay fan, விஜய் டிவி, வைரல் வீடியோ, ஜீ தமிழ் டிவி, விஜய் ரசிகை, சீரியல் கதாநாயகி, viral video, vijay fans, zee tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com